எஸ். சிவானந்தராஜா
இலக்கிய இசைச் சாரல்
1. பொது 2. நாதம் 3. கடவுள் வணக்கம் 4. பண்
1. பொது
நாம் எமது செவியினால் கேட்டு உணரத்தக்க ஒலியணுத் திரட்சியே இசையாகும். இனிய யாழ், குழல், தண்ணுமை ஒலிக்க ஆடலுக்கிசைந்த பாடலே இசை வடிவமாகும்.
"யாழுங் குழலுஞ் சீரும் மிடறுந்தாழ்குரல் தண்ணுமை ஆடலொ டிவற்றின் இசைந்த பாடல் இசையுடன் '
(சிலம்பு / அரங். 26-28)
முத்தமிழின் முதலாசிரியரான சிவபெருமானே முத்தமிழை அகத்திய மாமுனிவருக்கு உபதேசித்தான். முருகனிடம் தமிழின் இனிமையைக் கற்று அகத்தியம் என்னும் நூலை இயற்றி, தொல்காப்பியர் முதலாம் பன்னிரண்டு
மாணவர்கட்கும் உபதேசித்து, அகத்தியர் தமிழைத் தழைக்கச் செய்தார்.
" தழற்புரை சுடர்க் கடவுடந்த தமிழ் தந்தான்" (கம்ப/அகத் 4) "ஆதியிற்றமிழ் நூலகத்தியற் குணர்த்திய மாதொருபாகன்"
(பழம் பாடல்)
"குறுமுனிக்குந் தமிழுரைக்குங் குமர" (திருப்புகழ்-அருணகிரிநாதர்) "சிவனை நிசர் பொதியவரை முனிவனக மகிழவிருசெவிகுளிர இனியதமிழ் பகர்வோனே"
(திருப்புகழ் - பொதி அருணகிரிநாதர்)
இறைவன் கலைவடிவமாகவும், கலைப்பொருளாகவும்,
கலையாசானாகவும் உள்ளான்.
"கலையாகிக் கலைஞானந் தானேயாகி" (நாவுக்கரசர்) "கலைகள் வந்திறைஞ்சுங் கழல்"
(நாவுக்கரசர்)
"கலைக்கெல்லாம் பொருளாய்"
(சுந்தரர்)
இசைக்கு முதற் காரணராக இருக்கும் இறைவனைக் *" கானாதிகாரணர்' என ஆனாயநாயனார் புராணம் கூறும்.
இனிமை பொருந்திய இத்தெய்விக இசையானது வாழ்க்கைப் பெருநலத்தையும், வானுலகை வழங்கும் பண் பையும் தன்னகத்துக் கொண்டது. எம்மனத்தின் அழுக்கு நீங்கி ஒன்றாகும்படியான பேருணர்வைத் தந்து இசைவிக்கும் தன்மையை இசை உண்டாக்கும். உள்ளம் புகுந்து மனத்திலும் அறிவிலும் அருளுணர்வைத தரும். இவ்விசையைக் கேட்ட பின்பும், அது மீண்டும் மீண்டும் ஒலித்து உடம்பையும், உள்ளத்தையும் அடிமை கொள்ளும். இதை உணர்ந்த நெஞ்சம் மெய்ம் மறந்து உருகி இசை வெள்ளத்தில் மிதக்கும். இவ்விசைக்கு ஈடாக உலகில் எதுவும் இல்லை. இவ்விசையில் ஈடுபாடு அதிகமானால் பாலைநிலங்கூடப் பண்பட்டு வளமடையும். (ஈரடிஇரு இசை. 1-10 உரை)
இசை என்ற சொல்லுக்கு, புகழ், பாட்டு, சொல் எனப் பலபொருள்கள் உண்டு. மேலும் அச் சொல்லுக்கு கொளை, வரி, பாணி, கந்தருவம், பண் என்ற ஒரு பொருளுணர்த்தும் சொற்களும் உண்டு.
"கானம் கொளையே வருகந்தருவ கீதமிராகங்கேயம் பாணி நாதமிசை பண் காமரம்'
(பிங்கலம் 1374
அறிவியற் கலையான இசை அழகியற் கூறுகள் இணைந்து நுண்கலையாகவும், இலக்கிய மரபில் பண்பாட்டுக் கலையாகவும் மிளிர்கின்றது.
...Continue Reading
Comentarios