top of page
library_1.jpg

சரித்திர நாவல்கள்

Writer's picture: Tamil BookshelfTamil Bookshelf

தமிழின் முதலாவது வரலாற்றுப் புதினமான மோகனாங்கியை (1895) எழுதியவர் இலங்கையின் திருகோணமலையைச் சேர்ந்த. சரவணமுத்துப்பிள்ளை என்பவராவார்.


தமிழ்நாட்டில் மக்களைக் கவரும் வகையில் வரலாற்றுப் புதினங்களை எழுதித் தமிழ் வரலாற்றுப் புதினங்கள் மீது ஆர்வத்தை உருவாக்கியவர் எழுத்தாளர் கல்கி ஆவார். இதனால் இவர் தமிழ் வரலாற்றுப் புதினங்களின் தந்தை எனவும் அழைக்கப்படுவதுண்டு.


இவர் எழுதி "கல்கி" வார இதழில் தொடர்கதைகளாக வெளிவந்த பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு ஆகிய புதினங்கள் பெயர்பெற்றவை.


இவரைத் தொடர்ந்து, அகிலன், நா. பார்த்தசாரதி, செகசிற்பியன், கோவி. மணிசேகரன், சாண்டில்யன் போன்ற பல எழுத்தாளர்கள் தமிழில் வரலாற்றுப் புதினங்களை எழுதியுள்ளனர். சாண்டில்யன், குமுதம் வார இதழ் மூலம் பல வரலாற்றுப் புதினங்களைத் தொடராக எழுதிப் புகழ் பெற்றார். கடல் புறா, யவனராணி, ராஜமுத்திரை போன்ற இவரது புதினங்கள் குறிப்பிடத்தக்கவை.



15 views0 comments

Related Posts

See All

Comments


Subscribe here to get my latest posts

Thanks for submitting!

© 2023 Powered by Tamil Bookshelf

  • Facebook
  • Twitter
bottom of page