top of page

Tamil Bookshelf Group

Public·43 members



தமிழ் சிறுகதை இலக்கிய வடிவ வளர்ச்சி மட்டுமே, உலகின் மற்ற மொழி சிறுகதை இலக்கியங்களுக்கு நிகராக உள்ளது. ஏனைய பிற இலக்கியம் வடிவங்கள் தமிழில் பின்தங்கியே உள்ளதென்று, உலக ஒப்பியல் இலக்கிய ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். தமிழில் சிறுகதை வடிவம் எவரால் முதலில் கொண்டுவரப்பட்டது என்பதுகுறித்து விவாதம் உள்ளது. பாரதியாரின் ரயில்வே ஸ்தானம் என்ற சிறுகதையே முக்கியமான முதல் சிறுகதை என்பார்கள். ஆனால் சிறுகதை வடிவம் சரியாக அமைந்தது வ.வெ.சு அய்யர் எழுதிய மங்கையற்கரசியின் காதல் என்ற தொகுதியில் உள்ள குளத்தங்கரை அரசமரம் என்ற சிறுகதையாகும்.


தமிழின் முதலாவது வரலாற்றுப் புதினமான மோகனாங்கியை (1895) எழுதியவர் இலங்கையின் திருகோணமலையைச் சேர்ந்த த. சரவணமுத்துப்பிள்ளை என்பவராவார். தமிழ்நாட்டில் மக்களைக் கவரும் வகையில் வரலாற்றுப் புதினங்களை எழுதித் தமிழ் வரலாற்றுப் புதினங்கள் மீது ஆர்வத்தை உருவாக்கியவர் எழுத்தாளர் கல்கி ஆவார். இதனால் இவர் தமிழ் வரலாற்றுப் புதினங்களின் தந்தை எனவும் அழைக்கப்படுவதுண்டு. இவர் எழுதி "கல்கி" வார இதழில் தொடர்கதைகளாக வெளிவந்த பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு ஆகிய புதினங்கள் பெயர்பெற்றவை. இவரைத் தொடர்ந்து, அகிலன், நா. பார்த்தசாரதி, செகசிற்பியன், கோவி. மணிசேகரன், சாண்டில்யன் போன்ற பல எழுத்தாளர்கள் தமிழில் வரலாற்றுப் புதினங்களை எழுதியுள்ளனர். சாண்டில்யன், குமுதம் வார இதழ் மூலம் பல வரலாற்றுப் புதினங்களைத் தொடராக எழுதிப் புகழ் பெற்றார். கடல் புறா, யவனராணி, ராஜமுத்திரை போன்ற இவரது புதினங்கள் குறிப்பிடத்தக்கவை.

About

Welcome to the group! You can connect with other members, ge...
bottom of page