top of page
library_1.jpg
Writer's pictureTamil Bookshelf

அங்கும் இங்கும் - III

டாக்டர் நெ. து. சுந்தரவடிவேலு


பொருளடக்கம்

11. ஊக்கும் கல்வி …. 71

12. முதிய இளைஞர் இருவர் …. 75

13. புதுயுகத் தலைவர் …. 81

14. படி, படி, படி. …. 86



11. ஊக்கும் கல்வி

முதியோர் கல்வி நிலையத் தலைவர் ; மாணவ,மாணவியருடன் பழகும் இனிமையைக் கண்டு மகிழ்ந்தேன். முதியோர் கல்வி பற்றிப் பொதுப்படையாகச் சில மணித்துளிகள் பேசிக் கொண்டிருந்தேன்.


முதியோர் கல்வி-தொடர் கல்வி-நாடு முழுவதும் அளிக்கப்பட்டு வருவதை அறிந்தேன். பல நூறாயிரவர் அதில் ஈடுபட்டு அதனால் பலன் அடைந்து வருவதாகக் கேள்விப்பட்டேன். முதியோர் கல்வி ஈடுபாட்டில், ஆண்களுக்குப் பெண்கள் இளைத்தவர்கள் அல்லர் என்று தெரிந்து இரசித்தேன்.


இக் கல்விக்கூடங்களை (தொடக்கப் பள்ளிகளையும் உயர்நிலைப் பள்ளிகளையும்) உள்ளாட்சிக் கல்வி மன்றங்கள் நடத்துகின்றனவாம்.


முதியோர் வகுப்புகளைக் காண விரும்பினேன். முதல்வரே, என்னை அழைத்துச் சென்றார். அங்கு நடந்து கொண்டிருந்த வகுப்புகள் நூற்றுக்கு மேல், பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் பார்ப்பதுபோல், இரண்டொரு குப்புகளுக்குள் நுழைந்து இருந்து கவனித்தேன், அவற்றிலே ஒன்று. இக்காலத்துக்கு வேண்டிய போட்டோ பிடிக்கக் கற்றுக்கொள்ளும் வகுப்பு.


"என்ன ? கல்வியில் இது எப்படிச் சேரும் ? என்னும் எழுத்துமல்லவா கல்வி" என்று மிரளாதீர்கள்.


ஆத்திசூடியும், கொன்றைவேத்தனும், நாலடியாரும், சுந்தர காண்டமும், வழக்குரை காதையுமே கல்வி என்ற மயக்கப்பட்ட நமக்கு, இது புதுமையாகவே தோன்றும்.


'ஆயகலைகள் அறுபத்து நான்கு' என்னும் வழக்கினை ஆழ்ந்து சிந்தித்தால், மொழிப் பாடங்களுக்கு அப்பாலும் கல்வி விரிவதை உணரலாம். கணக்கோடு, கல்விக் கணக்கு முடிந்துவிடவில்லை என்பதை அறியலாம்.

'அத்தனையும் கல்வியே. ஆகவே எத்தனைப் பாடங்களை, 'பயிற்சிகளை திணிக்க முடியுமோ அத்தனையையும் திணித்து விடுவோம் பள்ளியிறுதிக்குள்' என்ற போக்கு தீங்கானது.


வாழ்வு முழுவதற்குமான கலைகள் பலவற்றையும் பள்ளிப் பருவத்திலேயே புகுத்தி விடாலாமென்ற போக்கு அறிவு அஜீரணத்தையே விளைவிக்கும். அடிப்படைக் கலைகள் சிலவற்றில் ஆழ்ந்த அறிவையும் பயிற்சியையும் கொடுப்பதே பள்ளிக்கூடங்களின் வேலை. விரும்பும் தேவைப்படுகிற சில பல கலைகளைப் பின்னர் வீட்டிலோ ,தொழிற்கூடங்களிலோ, கழகங்களிலோ, முதியோர் கல்வி கூடங்களிலோ பெறவேண்டும். அதற்கு வாய்ப்புகள் அமைத்து வைக்க வேண்டும். இத்தெளிவு பரவினால் கல்விச் சிக்கல்களில் பல தீர்ந்துவிடும்.


சிக்கல்களை விட்டு, நிழற்பட வகுப்பிற்குப் போவவோம். நான் எதைக் கண்டேன் ? அவ் வகுப்பில் இருந்தவர்கள் கற்றுக் குட்டிகள். முந்திய வகுப்பில் கொடுத்த வீட்டு வேலைகளை முடித்துக் கொண்டு வந்திருந்தனர். அதாவது ஒவ்வொருவரும் தாங்களே சில 'போட்டோ'க்களை எடுத்துவந் ருந்தனர். அவை தேர்ச்சி பெற்றவரால் கழுவப்பட்டு வைக்கப்பட்டிருந்தன.


ஒரு மாணவர், தான் எடுத் படமொன்றை குைப்பு முழுவதற்கும் காட்டினார். எல்லோரும் சில விநாடிகள் கவனித்தனர். அது போர்டில் மாட்டப்பட்டிருந்தது. அதை ஆசிரியர் மதிப்பிடவில்லை. சக மாணவர்களை மதிப்பிடச் சொன்னார்.

அதில் 'போகஸ்' சரியாக இல்லை என்று எனக்குத் தோன்றிற்று. என்னைக் கேட்டிருந்தால் அப்படியே சொல்லியிருப்பேன். ஆனால் அதைப் பற்றிக் கூறின மாணவர் என்ன சொன்னார் தெரியுமா? " 'போகஸ்' இன்னும் சிறிது வலப்புறம் வந்திருந்தால் படம் அருமையாக இருக்கும்” என்று மதிப்பிட்டார். இன்னொருவ 'இன்னும் சிறிது நேரம் 'எக்ஸ்போஸ்' செய்திருந்தால் படத்தின் தெளிவு அதிகமாயிருக்கும்" என்று குறிப்பிட்டார். இப்படி, இன்னும் இரண்டொருவர்,' இதை இப்படிச் செய்யலாம்; இன்ன பலன் அதிகமாகும்' என்று மதிப்பிட்டார்கள்.


யாருமே எதிர்மறைவில் பேசவில்லை. குற்றஞ் சாட்டவில்லை. போகஸ் சரியில்லை, 'எக்ஸ்போஸர்' போதாது என்று குறை காட்டிப் பேசாமல் இதை இப்படிச் செய்ய வேண்டும்; இது இன்னும் அதிகம் தேவை" என்று மட்டுமே வழி காட்டினர். தெளிவான வொரு கருத்தை ஆக்க முறையில் சொன்னதால் ஏற்றுக் கொள்வதைப் பற்றி மற்றவர்களும் கருத்துத் தெரிவித்தார்கள். கருத்துப் போர் நிகழவில்லை.கருத்து வளர்ச்சி நிகழ்ந்தது. இம்முறையில், அவர்கள் பயிற்சி வளரக் கண்டேன்.


உள்ளது சிறக்க வழிகூறும் முறையை, இங்கிலாத்தின், மற்ற கல்விக்கூடங்களிலும் கண்டேன். தொடக்கப்பள்ளியிலுஞ்சரி உயர்நிலைப் பள்ளியிலும் சரி. குறை காண்பதை விட| நிறைவுக்கு வழி சொல்வதே அங்கு மரபு, இங்கு ?


அப் படம். நம் வகுப்பில் காட்டப்பட்டு மதிப்பிடப்பட்டிருந்தால்,


" எவன் சார் இதை எடுத்தான்?”


" இவனுக்கு சுட்டுப் போட்டாலும் இக்கலை வராது."


'ஆனைப் பார்க்காமல், தோளைப் பார்க்கிறது நோக்கு'


'அமாவாசையிலே எடுத்த படமா ஐயா' இது?


இப்படிப் பிய்த்துத் தள்ளியிருப்பார்கள், நம் அறிவாளிகள், 'பிய்த்து எடுத்தே' பிழைக்கிற கூட்டம் நாம், இல்லாத வற்றை மட்டுமே பட்டியல் போட்டு, பறைசற்றி, சோர்ந்து போகிற கூட்டம் நாம்.


என்ன செய்ய வேண்டும் ; எப்படிச் செய்ய வேண்டும்; எதை அதிகப்படுத்த வேண்டும்; ; எதை விரைவுபடுத்த வேண்டும்; எதை மெல்லச் செலுத்த வேண்டும் என்று ஆக்க வழியிலே, உள்ளது சிறக்க, சொல்லிப் பழகாத மக்கள் நாம். எனவே சாண் ஏறினால் முழம் சறுக்கி ஒப்பாரி வைத்தோ காட்டுக் கத்தல் கத்தியோ, ஒயும் மக்கள் நாம்.


இங்கிலாந்து கல்விக்கூடங்களில் கண்டமுறை, ஊக்கு வழி, வளர்க்கும் வழி நம் பள்ளிகளுக்கும் வத்திடாதோ ? இந்த ஏக்கத்தோடு அவ் வகுப்பை விட்டு வெளியேறினேன். அச்சிந்தனை இன்னும் நிழலாடிக் கொண்டிருக்கிறது.

கற்க வந்தோமா, கல்லெறிய வந்தோமா என்பதே தெரியாத நிலையில் தம்பிகளை வைத்திருக்கிறோம். தொழில் திறமையைப் பற்றிச் சிந்திப்பதைவிடத் தகுதி என்கிற பொய்மான் வேட்டையிலே விரைகிறது ஆசிரியர் சமுதாயம்.


பெற்றோரோ, பிள்ளையைச் சீராக்குவதைத் தவிர மற்றெல்லா முயற்சிகளிலும் முனைந்து நிற்கின்றனர், சீராக்கக் கூட உரிமையுண்டா என்பதே வழக்கு இனியென்ன குறை?




12. முதிய இளைஞர் இருவர்

ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபத்திரண்டாம் ஆண்டு, ஸ்காட்லாந்தின் தலைநகரமாகிய எடின்பரோவில் இருந்தேன்.


ஒரிரவு ஏழு மணிக்கு, முதியோர் கல்விக் கூடமொன்றைக் காண ஏற்பாடாகி இருந்தது. அப்போது, மழை துாறிக் கொண்டிருந்தது. குளிர் காற்று சீறிக் கொண்டிருந்தது.


ஒட்டல் அறையிலே தங்கிவிட ஆசை. ஆனாலும் சொன்ன சொல்லைக் காப்பாற்ற வேண்டுமென்ற உண்ர்ச்சியால் உந்தப்பட்டு இரவுக் கல்விக்கூடம் போய்ச் சேர்ந்தேன்.


கல்லூரி முதல்வரைக் கண்டேன். அவர் அறையில் மேசையின் மேல் அழகிய விரிப்பொன்று இருந்தது. அது என் கண்ணைக் கவர்ந்தது; கருத்தையும் கவர்ந்தது.


அதிலே, மயிலொன்று பின்னப்பட்டிருந்தது. மயிலின் இயற்கைத் தோற்றம் என்னைத் தொட்டது. அதைப்பாராட்டினேன். முதல்வர் மகிழ்ந்தார். பலரும் பாராட்டினதாகக் கூறினார்.


கல்லூரியின் நடைமுறையைப் பற்றி விளக்கினார், அன்றைய குளிரிலும் மழையிலும்கூட, வழக்கமான வருகை இருப்பதாகக் கூறினார். 

கல்லூரி மாணவ மாணவியார்-முதியோர்-கல்வியின் மீதே கண்ணாயினார் என்பதை அறிந்தேன், மகிழ்ந்தேன்.


இதோ உங்களிடம் உரைத்து விட்டேன். நம் தம்பிகள், தங்கைகள் - மாணவ, மாணவியர்-காதுகளிலும் போட்டு வையுங்கள்.


பின்னர் கல்லூரியின் பல பகுதிகளையும் காட்டிக் கொண்டு வந்தார். சிற்சில வகுப்புகளுக்குள்ளும் நுழைந்தோம். ஒரு வகுப்பில் அம்மையார் ஒருவர் பெயரைச் சொன்னார். பின் வரிசையில் இருந்த ஓர் அம்மாள் கையை உயர்த்தினார்.


"வேலு. நீங்கள் பார்த்துப் பாராட்டிய மயில் விரிப்பை நெய்தவர் இவரே" என்றார் முதல்வர்.


“ஆகா ! உங்கள் வேலைப்பாடு மிக நன்றாயிருக்கிறது. எவ்வளவு காலம் பயிற்சி பெற்றீர்கள். இவ்வளவு நேர்த்தியாகச் செய்திருக்கிறீர்களே !” என்றேன் நான்.


“ஒராண்டு காலம் : இக்கல்லூரியில் கற்றுக் கொண்டேன். பலன், அந்த விரிப்பு” என்று அடக்கமாகக் கூறினார் அந்த அம்மாள்.


“அப்படியா ? முந்தைய பழக்கமின்றி, இந்த வயதில், புதிய கலையைக் கற்றுக்கொண்டு, இவ்வளவு பெரும் வெற்றி பெற்றுள்ள உங்களுக்குப் பரிசு கொடுக்கலாம்” என்றேன்.


"கொடுக்கலாமென்ன ! ஏற்கனவே இதற்குப் பரிசு பெற்று விட்டார்கள். சென்ற ஆண்டு. ஸ்காட்லாண்ட் முழுமைக்கும், கற்றுக்குட்டி நெசவாளர்களுக்கென்று போட்டி நடந்தது. அப்போட்டியில், இவ்விரிப்பிற்காக, இந்த அம்மாளுக்கு முதற் பரிசு கிடைத்தது" என்று பூரிப்போடு உரைத்தார் முதல்வர். 


"ஆர்வங் கலந்த பாராட்டு ! மேலும் பல வெற்றிகள் கிட்டுவதாக" என்று கூறினேன். வாழ்த்துவதற்கு எனக்கு வயது போதாது. என்னைக் காட்டிலும் பல ஆண்டு மூத்தவர், அந்தப் பாட்டி.


சில நிமிடங்களுக்குப் பின், வேறொரு வகுப்பறையில் இருந்தோம். வகுப்பறைச் சுவர் ஒன்றில் அழகிய ஓவியம் ஒன்று காட்சியளித்தது. மலையும் காடும், அருவியும் ஆறும் அழகாகத் திட்டப்பட்டிருந்தன. அப்படத்தைக் கண்டு சொக்கினேன்.


"ஆகா ! எவ்வளவு திறமையாகத் தீட்டப்பட்டிருக்கிறது இவ்வோவியம் !" என்று வியந்தேன்.


"இதைத் திட்டியவரும் இங்கேயே இருக்கிறார்" என்றார் முதல்வர். அதே மூச்சிலே, ஒரு பெயரைச் சொன்னார். பெரியவர் ஒருவர் ஒரு பக்கத்திலிருந்து கையைத் தூக்கினார்.


"இவர்தான், இதன் கர்த்தா. இதுவும் பரிக பெற்ற வேலைப்பாடு. சென்ற ஆண்டு, ஸ்காட்லாண்டு முழுமைக்கும் கற்றுக்குட்டி ஒவியர்களுக்கென்று போட்டி யொன்று வைத்தார்கள். அதற்காகத் தீட்டிய படம் இது. இதற்கு முதற் பரிசு கிடைத்தது" என்று இதன் வரலாற்றை விளக்கிக் கூறினார் முதல்வர்.


"பலே, உங்கள் கல்லூரியில், பல, முதல்தரமான கற்றுக் குட்டிகள் உள்ளனரே ! இவர் எப்போது ஓவியம் வரைவதில் ஈடுபட்டார் ?" இது பக்க உரையாடல்.

"இக் கல்லூரியில் சேர்ந்த பிறகே, ஒவியம் வரையும் பயிற்சி பெற்றேன். ஒராண்டுப் பயிற்சிக்குப் பின் போட்டியிட்டேன்" என்றார் ஓவியக்காரர். 


"அப்ப்டியா? நீறுபூத்த நெருப்புப் போன்றிருந்த உங்கள் திறமையைப் போற்றுவதா ? தள்ளாத வயதிலும் புதுப்புதுத் திறமைகளை வளர்த்துக் கொள்ளும் உங்கள் ஊக்கத்தைப் போற்றுவதா? முழு மூச்சு ஈடுபாட்டைப் போற்றுவதா? என்று தெரியாது திகைக்கிறேன். தொடர்ந்து வெல்க நீவிர், மன்னிக்க வேண்டும். உங்கள் வயதை அறிந்து கொள்ளலாமே?" என்று இழுத்தேன்.


"அதற்கென்ன? என் வயது எழுபத்தாறு " என்று கணீரென்று உரைத்தார். ஓவியக்காரத் தாத்தா.


"நீவிர் நூறாண்டு வாழ்க" என்றேன், போகலாமென்று சாடை காட்டினேன் முதல்வருக்கு.


"இரண்டே விநாடி ; சிறு-செய்தி. ஒவியப் போட்டியில் முதற் பரிசு பெற்ற இவரும் நெசவுப் போட்டிலில் முதற் பரிச பெற்ற அந்த அம்மாளும் கணவன் மனைவி' இதை, முதல்வர் கூறி முடிப்பதற்குள், வகுப்பிலிருந்த அனைவரும் கைதட்டி மகிழ்ந்தனர். முதல்வர் தொடர்ந்தார் பேச்சை. இருவரு இளைய மாணவர்கள். இவர்கள் சேர்ந்து ஈராண்டு ஆகவில்லை. இருவரும், பரிசு பெற்ற இரு பொருட்களையும் தங்களுக்ககன்று வைத்துக் கொள்ளாமல், இக் கலைகளை: கற்றுக் கொடுத்த கல்லூரிக்கே அன்பளிப்பாக்கிவிட்டனர்! இக்கொடையே இவர்கள் சிறப்புக்கெல்லாம் சிகரம்"- இதை முதல்வர், சொல்லி முடித்தது தான் தாமதம், நீண்ட பலமான கைதட்டல் வகுப்பிலே. சில விநாடிகளுக்கு முன் நிகழ்ந்ததைவிட பலமான கைதட்டல்.


மாணவத் தம்பதிகளின் ஆர்வமும் முயற்சியும் ஒரு பக்கம் பரவசப்படுத்தின சிறப்பைப் போற்றும் சக மாணவர்களின் சிறப்பு ஒரு பக்கம் பரவசப்படுத்திற்று. அரும்பொருளையும் பொதுப் பொருளாக்கும் நல்லியல்பு மற்றொரு பக்கமிருந் பரவசப்படுத்திற்று. மேலும் இருந்தால், பரவசத்தில் மூழ்கிப் போவோமென்று அஞ்சி, மெல்ல வெளியேறினோம்.


"நெசவுப் போட்டியில் வெற்றி பெற்ற அம்மாளின் வயது எழுபத்திரண்டு. ஆறு பதிலும் எழுபதிலும் முதியோர் கல்விக் கூடங்களில் சேர்ந்து , புதியன பல கற்போர், ஆணும் பெண்ணும், எண்ணிறந்தோர்!" என்ற கல்லூரி முதல்வர். காதோடு காது சென்னது ஒலித்துக் கொண்டிருக்கிறது. என் காதிலே ஒலித்துப் பயன்?


இந்தியா திரும்பிய பின், பல நண்பர்களிடம் இதைக் கூறி, என் மகிழ்ச்சியைப் பகிர்த்து கொண்டேன். கேட்டவர்கள், பயபக்தியோடு கேட்டார்கள். "ஆமாங்க அவங்க மாதிரி நாம் எப்ப வரப்போகிறோம்" என்று முடித்து விட்டார்கள்.


ஒருவர் மட்டும் ஈடு கொடுத்தார். அந்தக் கிழவனும் கிழவியும் கல்லூரிக்குப் போவதில் போட்டியிட்டார்கள். ஆளுக்கொரு புதுக் கலை கற்று, பரிசு பெறுவதில் போட்டியிட்டார்கள். இருக்கட்டுமே, நாம் மட்டும் என்ன குறைந்து போய்விட்டோம்? சென்ற ஆண்டுதான் என் மனைவிக்கும் எனக்கும் போட்டி. இருவரும் போட்டியை ஏற்றுக்கொண்டோம்.


" சம்பளம் கட்டு படியாகவில்லை. கொஞ்சம் பவுடர் வாங்குவதை......" என்று நீட்டினேன்.


"பளிச்சென்து பதில் சொன்னாள் : 'நீங்கள் மட்டும் காசைப் புகையாக ஊதலாம். நான் அச்செலவிற்கு மேக்கப் பூச்சிற்குச் செலவு செய்தால் கேளுங்கள். இந்த வீட்டில் எனக்கு இதற்குக்கூட வக்கு இல்லையா ?’ என்று கண்ணிர் வடித்தாள், என் இல்லத் தரசி. 


“இது சகவாழ்வுக் காலம், சகவிரயக் காலமும் கூட. இதற்கு ஏன் வருந்துகிறாய்” என்று சமாதானப்படுத்தினேன்.


“அன்று முதல் எங்கள் வீட்டில் சிகரெட் செலவுக்கும் பவுடர் செலவுக்கும் போட்டி. ஆனால் இக்கால விளையாட்டுப் போட்டி போல் அடிதடி கிடையாது” என்று திசை திருப்பி விட்டார், நகைச்சுவை நிபுணர்.


நாற்பதானால், நாளைக கணக்குப் பார்க்கும் நாமெங்கே! எழுபதானாலும் ஏங்கி, முடங்கிக் கிடக்காமல், புதுப் புதுக் கலைகளைக் கற்கும் பிறர் எங்கே ? யாரிடத்தில் கேட்க இதை ?


தாம் வளர்ந்து, நாட்டையும் வளர்க்க வேண்டிய காளையரோ, வழியிலே நின்று விடுகின்றனர். அறிவாற்றலைவிட, பிற திறமைகளை வளர்ப்பதிலே மூழ்கி விடுகின்றனர்.


தொன்மையையும் பண்பாட்டையும் பற்றிப் பன்னிப் பன்னிப் பேசும் பெரியவர்களோ, கமக்கு எங்கே ஐயா வரும்’ என்று சபித்து விடுகிறார்கள்.

நாகரிகவாதியோ, ‘காமிக்’கோடு நழுவி விடுகிறார்.


பொதுமக்களே, உங்களுக்கு யார் சொல்வார்? பார் கற்றுக் கொடுப்பார் ?





13 புதுயுகத் தலைவர்

'படி, படி, படி' ; இந்நல்லுரை, அறவுரை, ஊக்க உரை: எளிய அமைப்பும், உயரிய கருத்தும் நிறைந்த இவ்வுரை, சோவியத் நாட்டிலுள்ள எல்லா வயதினரையும் கவர்ந்தது இதுவே அந்நாட்டு மக்களின் தாரக மந்திரமாக இன்றும் இருக்கிறது. கோடாலு கோடி மக்களைத் தொடர்ந்து உந்துகிறது.


இது எங்களுக்கு வியப்பாக இருந்தது. இவ்வெளிய உரைக்கு எங்கிருந்து வந்தது இத்தனைப் பேராற்றல் ? எப்போதோ ஒரு முறை எழுச்சியூட்டினாலும் பல்லாண்டுகளாக ஆற்றல் குறையாது ஊக்குவதன் இரகசியம் என்ன ?


இவ்வையப்பாடுகள் எழுந்தன. இவற்றை மெல்ல வெளியிட்டோம். விளக்கமும் பெற்றோம். அவற்றின் சாரத்தை உங்கள் முன் படைக்கின்றேன். இதோ :


இவ்வுரையை வழங்கியது யார் ? குழந்தையைப் படிக்க வைக்கப் பாடுபடும், சாதாரண தொடக்கப் பள்ளி ஆசிரியரா? இல்லை.


முதல் தலைமுறையாக ஏழை மாணவர்களுக்கு உயர் நிலைக் கல்வியளிக்க முயலும் பட்டதாரி ஆசிரியரா? இல்லை. 


‘கல்லூரிக்கு எப்படியோ வந்துவிட்டார்களே ! நமக்குத் தெரிந்தைச் சொல்லிப் பார்ப்போம்’ என்று நினைக்கும் பேராசிரியரா? அவரும் இல்லை.


கல்வி ஆய்வாளர்களா? கல்வித் துறைப் பெரியவர்களா? இல்லை. கல்வித் துறையினரல்ல, மேற் கூறிய அற, ஊக்க உரையை வழங்கியது. பின் யார் ?


“வறுமைப் பாதாளத்தில் வாடி, அறியாமைக் காரிருளில் நடுங்கி, கொத்தடிமைப் பிழைப்புப் பிழைத்து வந்த கோடானு கோடி மக்களுக்குப் புது வாழ்வு தந்த, புது யுகம் அமைத்த எங்கள் தலைவர் காட்டினார் இந்த இலட்சியத்தை” என்று பக்திப் பரவசத்தோடு கூறினார் சோவியத் கல்வியாளர்.


அத்தலைவர் யாரோ ? என்ன பேரோ ?


“அவர் லெனின் ; தோழர் லெனின்; சோவியத் நாட்டின் தந்தை லெனின் பெரியார் லெனின்” இவ்வகையிலே லெனினைப் பற்றிக் கூறக் கேட்டோரம்.


'படி, படி, படி' என்கிற இலட்சியத்தை யாருக்குக் கொடுத்தார் ? ஒரு பிரிவினருக்கா கொடுத்தார் ? இல்லை ! பலருக்கா கொடுத்தார் ? இல்லை. பல பிரிவினருக்கா கொடுத்தார் ? ஆம் அப்படியே.


மாபெருந் தலைவர் எச்சந்தர்ப்பத்தில் இப்படிக் கூறினார் தெரியுமா ?

பல்லாண்டுகளுக்கு முன், சோவியத் ஆட்சி அமைவதற்கு முன், பாட்டாளி ஆட்சிக்குத் திட்டம் தீட்டும் காலம், அது. இரகசியத் திட்டம் தீட்டும் காலம் பலப்பல குழுவினருக்குப் பலப்பல பொறுப்புகள் ஒதுக்கப்பட்ட மிக தெருக்கடியான காலம்.


அப்போது இளைஞர் சிலர், தோழர் லெனினை இரகசியமாகக் கண்டனர். விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடத் துடிக்கும் ஆவலைத் தெரிவித்தனர். அவ்விளைஞர்கள், மாணவர்கள் என்பதைத் தெரிந்து கொண்டார் ; அவர், அவர் களுக்கு ஒதுக்கிய பணி, படிப்பு ; வேறு பொறுப்புகள் அல்ல.


பிற பொறுப்புகளுக்குத் தேவைக்குமேல் ஆட்கள் கிடைத்துவிட்டதாலா ? இல்லையென்று கேள்விப்பட்டோம். பின் என்ன காரணத்தால் ?


லெனின் சிந்தித்தது இரஷ்யாவின் உடனடி எதிர்காலத்தைப் பற்றி மட்டுமல்ல; திட்டமிட்டதும் உடனடித்தேவைக்கு மட்டுமல்ல நீண்ட எதிர்காலத்தைப் பற்றிச் சிந்தித்தார். நீண்ட எதிர்கால வளர்ச்சிக்கும் என்னென்ன தேவை என்று சிந்தித்தார், தெரிவித்தார்.


‘நவீன கல்வியே இரஷிய நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கும் வளத்திற்கும் துணை செய்யும். அக் கல்வி எவ்வளவுக் கெவ்வளவு அதிகமாக, ஆழமாகப் பரவுகிறதோ, அவ்வளவிற்கே, இரஷிசியாவின் எதிர்காலம் நன்றாக இருக்கும் : உறுதியாக இருக்கும். எத்தகைய நிலையையும் தாங்கக் கூடியதாக இருக்கும்’ என்று உணர்ந்தார்.


‘மாணவர்களை அப்போதைய கிளர்ச்சிக்கு இழுத்து சிட்டுவிட்டால். புதிய இரஷியாவை, பொதுவுடைமை இரஷியாவை உருவாக்குவதற்கு வேண்டிய அறிவாளிகள், விஞ்ஞானிகள், தொழில் வல்லுநர்கள் பொறுப்பேற்கும், ஆற்றல் உடையவர்கள் ஆகியோருக்குப் பஞ்சம் ஏற்பட்டு விடும். அப்பஞ்சம் எல்லாத் துறைகளையும் பாதிக்கும’ என்று தெரிந்து மாணவர்களைக் கிளர்ச்சிக்காரர்களாக்காமல், ஆயத்தக்காரர்களாக இயங்கச் செய்தார்.


இப்படி அவர் நல்வழியில் நடத்தியதால், அதைப் பின்பற்றி எங்கள் மாணவ சமுதாயம் கற்கும் சமுதாயமாகவே இருந்து வருகிறது. கற்றது போதாது; மேலும் மேலும் கற்க வேண்டும் ; கற்றதைப் பயன்படுத்த வேண்டும் ; சமூக நலனுக்குப் பயன்படுத்த வேண்டும் என்ற குறிக்கோளோடு, பெருநடை போட்டு வருகிறது . எங்கள் இளைய தலைமுறை யினரைப் பற்றி நாங்கள் பூரிப்படைகிறோம்" என்று சோவியத் கல்வியாளர்கள் கூறக் கேட்டோம்.


மாணவர்களை விதைநெல் போன்று கட்டிக் காத்த பெருத் தலைவரைப் பற்றி அவர்கள் பெருமை கொள்வதில் வியப்பில்லை. ஆனால் அவர் காட்டிய அறிவு வழியை, ஆக்க வழியை, பத்திய வழியை அவருக்குப் பின்னரும், பல்லாண்டு களாக, நாடு முழுவதும், கோடானுகோடி மக்களும், தொடர்ந்து பின்பற்றி வருவது எங்களுக்குப் பெரும் வியப்பாக, இருந்தது.


“என்னே ! உங்களுக்குத் தலைவரிடம் உள்ள பற்று” என்று பாராட்டினோம்.


“வாழ்வளித்த பெரியவருக்கு தாங்கள் செய்யக் கூடியது. வேறு என்ன இருக்கிறது ? தம் நன்மைக்காகப் பெருமைக்காக அல்லாது, மக்களின் நீண்ட எதிர்காலத்திற்காக, நாட்டின் நிலையான நல்வாழ்விற்காக வழிகாட்டினால், அதைக்கூடப் பின் பற்ற முடியாத மக்கள் இருந்தென்ன; போயென்ன ?” என்று பரவசத்தோடு ஒருவர் விளக்கக் கேட்டோம். இந்தியர்களாகிய நாங்கள் மூவரும் ஒருவரை ஒருவர் கடைக் கண்ணால் பார்த்துக் கொண்டோம். போற்ற மட்டும் கற்றுக்கொண்டு, பின்பற்றுவதற்கு வேண்டிய ஊக்கமும் உள் வலியும் அற்றுக் கிடக்கும் நம்மை எண்ணி நாணியதை அவர் புரிந்து கொண்டாரோ என்னவோ !


“இளைஞர் சமுதாயம், மாணவர் சமுதாயம், பொதுச் சமுதாயத்தின் ஒரு பகுதி ; சிறு பகுதியும் கூட. சமுதாயம் முழுவதும், கல்வியின் தேவையையும், அருமையையும் பெருமையையும் உணர்ந்து, அதற்குத் துணை நின்றால் மட்டுமே, அப்படித் துணை புரியும்போதே, இளைஞர் கல்விப்பயிர் அழிக்கப்படாதிருக்கும்."


“ஆகவே மாணவர் சமுதாயத்தில் மட்டுமின்றி, பொதுச்சமுதாயம் முழுவதிலும் கல்விச் சூழ்நிலையை வளர்த்து விட்டார் லெனின்” என்றார்.




14. படி, படி, படி!

படி; படி ; படி ! இவை சிறிய சொற்கள், எளிய சொற்களும் ஆகும். சிறிய எளிய இம் மூன்று சொற் தொகுப்பின் சாதனை அரியது; பெரியது; அரிதினும் அரியது: பெரிதினும் பெரியது. இது உண்மை ; வெறும் புகழ்ச்சி யில்லை. அப்படியா என்று மலைக்க வேண்டா. இதோ அற்புதமான சான்று.


“எங்கள் மக்களில் மூன்றில் ஒருவர் ஏதாவதொரு கல்வி முறையில் சேர்ந்து கல்வி பெற்று வருகிறார்கள். இக் கூற்றினைக் கேட்டேன் : அடுத்தடுத்துக் கேட்டேன் ; நான்கு வாரங்கள் கேட்டேன். பெருமிதத்தோடு கூறக் கேட்டேன். வெற்றியொளி வீச, மகிழ்ச்சியோடு கூறினர், யாரோ வழிப்போக்கர், காற்று வாக்கிலே கூறவில்லை. விவர மறிந்தோர், பொறுப்புடையோர், ஈடுபாடுடையோர் கூறினர். புள்ளி விவரத்தோடு கூறினர். புள்ளி விவரத்தைத் தெரிந்து கொள்ளுங்கள்.


‘எங்கள் நாட்டின் மொத்த மக்கள் எண்ணிக்கை 23 கோடியை நெருங்குகிறது. இந்த இருபத்து மூன்று கோடி பேர்களில் ஏழு கோடியே எழுபது இலட்சம் மக்கள் இன்று கல்வி கற்று வருகிறார்கள்.’ இவை நான் கேட்ட புள்ளி விவரங்கள். இவை நம் நாட்டுப் புள்ளி விவரங்கள் அல்ல நம் மக்கள் எண்ணிக்கை ஐம்பது கோடியை நெருங்குவது யாருக்குத் தெரியாது ! பின், எந்தநாட்டைப் பற்றிய தகவல் இது ? இதோ சொல்லி விடுகிறேன். என் மேல் கோபக் கனல் வீசாதீர்கள். சோவியத் நாட்டைப் பற்றிய தகவல் இது. அந்நாட்டிற்கு 1931 ஆம் ஆண்டில் சென்றிருந்தேன். அப்போது அவர்கள் எண்ணிக்கை இருபது கோடி. 1937 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்களில் மீண்டும் சென்று வர நேர்ந்தது. அம்மக்கள் எண்ணிக்கை இருபத்து மூன்று கோடியை நெருங்குவதைத் தெரிந்து கொண்டேன்.


மக்கள் பெருகப் பெருக, படிப்போர் எண்ணிக்கை வளர்ந்துகொண்டே இருக்கிறது. அந்நாட்டில் கல்வி வாய்ப்புக்களும் பெருக்கெடுத்து ஒடிக் கொண்டேயிருக்கின்றன.


‘கல்வி கற்பவர்கள்’ என்னும் சொற்றொடர் நம் மனக்கண் முன்னே யாரை நிறுத்தும்? ஐந்து வயதுச் சிறுவனை, சிறுமியை பத்து வயதுப் பையனை பெண்ணை, பதினெட்டு வயது காளையை கன்னியை நிறுத்தும். இருபத்தைந்து வயது இளம் தம்பதிகள் கற்போர்களாகக் காட்சியளியார். நமக்கு முப்பத்தைந்து வயது குடும்பிகள் மாணவ. மாணவிகளாகத் தோன்றுவதில்லை இங்கு. நாற்பத்தைத்து: வயதினரோ மாணவப் பருவத்தை விட்டு நெடுந்துாரம் விலகி விட்டவர் ; நாள்களை எண்ணிக் கொண்டிருப்பவர், நம் சூழ் நிலையில் ; மன நிலையில்.


‘மூன்றிலொருவர் கற்றுக் கொண்டிருக்கிறார்கள்’ என்றதும்,


“உங்கள் நாட்டின் மக்களில், மூன்றில் ஒருவர், பள்ளி வயதினரான பாலர்களும், சிறுவர்களும், இளைஞர்களும், வாலிபர்களும் என்று பொருளா ?” என்னும் ஐயத்தைக் கிளப்பினோம்.


“ ‘பள்ளி வயது’ என்று ஒன்று இல்லை. படிப்பிற்குத் கால வரம்பு கிடையாது. வாய்ப்பு வரம்பு உண்டு பல நாடு களில் ; அதுவும் இங்கு இல்லை ஊக்க வரம்பு உண்டு, பல சமுதாயங்களில்; அதையும் இங்குக் காண முடியாது. இங்குக் கல்வித் தாகம் தணியாத் தாகம். பாடம் ஏற, பரீட்சையில் தேறத் தேற, சான்றிதழ் பெறப் பெற புதுப் புதுக் கல்வியினைக் கற்பதையே காண்பீர்கள். கற்போர் ஏழு கோடி எழுபது இலட்சத்தில் சிறுவர் சிறுமியர் உண்டு : இளைஞர் உண்டு : காளையரும் கன்னியரும் உண்டு; தந்தையரும் தாயாரும் உண்டு...”


விளக்கம் முடிவதற்குள், குறுக்கு வினாக்கள் எழுந்தன. என்ன வினாக்கள் ?

“உங்கள் நாட்டில், எல்லா வயதினரும் கல்வி கற்பதில் ஈடுபட்டிருக்கிறார்கள். இளைஞர்கள், வாலிபர்கள் மட்டு மன்றி முதியோரும் கல்வி பெறுகிறார்கள் என்பதை விளக்குகிறீர்கள், நல்லது. இத்தொடர் கல்வி ஈடுபாடு, தொழிலாளர்களிடையே உண்டா ?

நகர்ப்புறத் தொழிலாளர்களிடை மட்டுமா ? நாட்டுப்புறத் தொழிலாளர்களிடையிலுமா? ஆலைத் தொழிலாளர்களைப் போல் பண்ணைத் தொழிலாளர் களும் தொடர்கல்வி பெறுகிறார்களா ? கல்வியில் தொடர் வளர்ச்சி ஆண்களோடு நின்று விடுகிறதா ? பெண்களுக்கும் உண்டா ? இவ்வினாக்களுக்கு விடை இதோ :


“முன்பு சொத்தைப் போல் , கல்வியும், ஒரு சிலருடைய தனி உடைமையாக இருந்தது. ஜார் காலத்தில் கல்வி பொது மக்களுக்கு எட்டாததாக இருந்தது. எழுதப் படிக்க கூடத் தெரியாதவர்களே ஜாரின் குடிகளிலே நூற்றுக் எழுபத்து நான்கு பேர். சோவியத் மக்களின் நிலை அடியோடு மாறி விட்டது. ஐம்பது வயதிற்குட்பட்ட ஆண் பெண் அனைவரும் எழுத்தறிவு பெற்றனர் ; அதோடு நின்று விடவில்லை, எங்கள் கல்வி வளர்ச்சி. எழுத்தறிவு பெற்றவர்கள் நான்காவது வகுப்பு நிலையை எட்டிப் பிடித்தனர். அடுத்து எட்டாம் வகுப்பு நிலைக்குக் கற்றனர். நின்றனரா அதோடு ? தொடர்ந்து படித்தனர். பள்ளியிறுதிவரை படித்துத் தேறினர். தொடர்ந்து, மேல் படிப்பும் படித்து வெற்றி பெற்றவர், எண்ணற்றவர்.


சோவியத் ஆட்சியிலேயே, முதல் முதல் எழுதப் படிக்கக் கற்றுக்கொண்டு தொடர் கல்வியால் வளர்ந்தவர்கள் பாட்டாளிகளும் உழவர்களுமே. நகர்ப்புறப் பாட்டாளிகள் மட்டுமல்ல ; நாட்டுப்புற, சிற்றாள் தொழில் புரியும் பாட்டாளிகளும், பண்ணைகளில் பாடுபடும் உழவர்களும் இவ்வழியில் வளர்ந்துள்ளனர். ஆண்களைப் போலப் பெண்களும் சோவியத் கல்வி வெள்ளத்தின் பலனை நிறையப் பெற்றுள்ளனர் ; பெறுகின்றனர் ; இனியும் பெறுவர். ஏழு கோடியே எழுபது இலட்சம் பேர் இப்போது இங்குக் கல்வி கற்று வருவதாகக் கூறினேன். அவர்களில் நான்கு கோடியே பத்து இலட்சம் மக்கள் தொழில் புரியும் தொழிலாளி மக்களும் பணிபுரியும் பண்ணையாட்களும் ஆவர். மற்றவர்கள் சிறுவர். சிறுமியர், இளைஞர், காளையர் உட்பட, மூன்று கோடியே அறுபது இலட்சம் பேர்களே; இப்போது தெரிகிறதா, இந்நாடு உழைப்பாளிகளுக்கு உணவும் உடையும் உறையுளும் தேடிக் கொடுப்பதோடு நில்லாமல், கல்வி, மேலும் மேலும் கல்வி,, காலமெல்லாம் கல்வி, வாழ்நாள் முழுவதும் கல்வி கொடுக்கிறது என்ற உண்மை ?


“வாழ்க்கைத் தர உயர்விற்குப் பாடுபடுவதைப் போல், பொது மக்களின் கல்வியறிவு நிலையை உயர்த்துவதற்கும் இனிக் கவனஞ் செலுத்தி வருகிறோம் நாங்கள். போதிய கல்வியறிவே-காலத்திற்கேற்ப வளரும், மாறும், கல்வி அறிவே-பிற முன்னேற்றங்களுக்கும் வளர்ச்சிகளுக்கும் ஆணி வேர். அவ்வாணி வேர் இரண்டொருவரிடம் உறுதியாக இருந்தால் போதாது. பரவலாக எல்லாரிடமும் பரவியதாக இருக்க வேண்டும். இது எங்கள் அடிப்படைக் கொள்கை அசைக் முடியாத கொள்கை. சோவியத் ஆட்சி அமைந்த அன்று முதல் இன்றுவரை இடையறாது இக்கொள்கையை நடைமுறைக்குக் கொண்டு வந்திருக்கிறோம். கல்வியை ஒடுக்கும் எண்னம் எதிர்காலத்திலும் எழாது” என்று விளக்கினார், சோவியத் கல்வியாளர்களில் ஒருவர்.


 

9 views0 comments

Comments


bottom of page