top of page
library_1.jpg

அங்கும் இங்கும் - IV

Writer's picture: Tamil BookshelfTamil Bookshelf

டாக்டர் நெ. து. சுந்தரவடிவேலு




பொருளடக்கம்

15. ஒளி பரப்ப வாரீர் …. 91

16. கலையின் விளக்கம் …. 91

17. ஈர உள்ளம் …. 101



15. ஒளி பரப்ப வாரீர்

கல்விக்கு ஆதரவான சூழ்நிலையைப் பொது மக்களிடம் எப்படி உருவாக்கினார்கள் ? சோவியத் ஆட்சி, மலர்த்த போது, சோவியத் மக்களில் நான்கில் மூவர், எழுதப் படிக்கத் தெரியாத, தற்குறியாக அல்லவா இருந்தார்கள்? அத்தகைய சமுதாயத்தில் கல்விப் பசியை எப்படி ஏற்படுத்தினார்கள்? எப்படி அப்பசியை ஆற்றினார்கள் ? மேலும் மேலும் பசி எடுக்கும்படி என்ன செய்தார்கள் ? இந்த வினாக்களைக் கேட்டோம். பதில் கிடைத்தது.


‘எழுதப் படிக்கத் தெரியாதவன், அரசியல் அப்பாவி. அவன், அரசியலில் பங்குகொள்ள ஆற்றல் அற்றவன். அந்நிலையை மாற்றி, கல்வியறிவு பெற்றவனாகச் செய்தால், குடிமகன், தன் நினைவோடு, அரசியலில் உரிய பங்குகொள்ள முடியும். வேறு பல பெரும் பொறுப்புகள் இருந்தாலும், ‘எழுத்தறியாமையைப் போக்குவதில், தற்குறித்தனத்தைப் போக்குவதில் முதற் கவனம், பெருங் கவனம், விரைவான முயற்சி தேவை’, என்று லெனின் உரைத்தாராம். அதை ஆட்சியும் கட்சியும் ஏற்றுக்கொண்டன. கொள்கை அளவில் ஏற்றுக் கொண்டதோடு நிற்கவில்லை ; கொள்கையை நிறை வேற்றக் குதித்தனர். நாடு முழுவதற்கும் எழுத்தறிவிப்பு இயக்தித்திற்குத் திட்டமிட்டனர். பல தரத்தினர் ஆதரவைத் திரட்டினர்.


மேற்கொள்ள வேண்டிய பணி சிறியதா ? இல்லை; பெரியது. நான்கில் மூவர் தற்குறி என்றால், நோயின் விரிவு விளங்காது. அன்றிருந்த பதினாறு கோடி மக்களில் பன்னிரண்டு கோடி மக்கள் தற்குறிகள். பன்னிரண்டு கோடி முதியோருக்கு எழுதப் படிக்கக் கற்றுக் கொடுப்பது, சில ஆண்டுகளுக்குள் கற்றுக்கொடுப்பது என்றாலே பலருக்குச் சிரிப்பு வரும். கனவு என்று ஒதுக்கிவிடத் தோன்றும்.


பெருந்தொடர்மலை போல், ஒங்கி உயர்ந்துள்ள தற்குறித் தன்மையைக் கண்டு மலைக்கவில்லை, தயங்கவில்லை, பின்னடையவில்லை சோவியத் மக்கள். அதன் மேல் போர் தொடுத்தனர். பெரும் போர் தொடுத்தனர். இங்கும் அங்கும் சிற்சில நகரங்களில் மட்டுமல்ல, பட்டி தொட்டிகளில் எல்லாம் தற்குறித் தன்மையை அழிக்கும் போர் நடந்ததாம். நாட்டின் எல்லாப் பக்கங்களிலும் மிகத் தீவிரமாக நடந்ததாம்.


இத்தனைக் கோடிப் பேரைப் படிக்க வைக்க எத்தனை இலட்சம் ஆசிரியர்கள்,-முதியோர் கல்வி ஆசிரியர்கள் - தேவைப்படுவர். அத்தனை இலட்சம் ஆசிரியர்கள் இருந்தனரா ? இல்லையாம். பின்னர் என்ன செய்தனர்?

எழுத்தறிவு இயக்கத்தை, ஆட்சியின் திட்டமாக ஏற்றுக் கொண்டதும், பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்கள், இந்தப் பொதுப் பணிக்காகத் தங்கள் நேரத்தையும் உழைப்பையும் உதவ முன் வந்தனர். தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் மட்டுமல்ல, உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்களும் கல்லூரி ஆசிரியர்களும், இந்த ஞான வேள்வியில் ஈடுபட முன் வந்தனர்.


ஆயினும், மேலும் பலர் தேவைப்பட்டனர். வேண்டுகோள் எழுந்தது. நாட்டாட்சியின் உயர்மட்டத்திலிருந்து வேண்டுகோள் எழுந்தது. பலன் விளைந்தது. ஆசிரியர் அல்லாத பலரும் இவ் வேள்வியில் ஈடுபட முனைந்தனர். படித்தவர்களிலே பல இலட்சம் பேர், அறியாமையை அழிக்கப் போர் தொடுக்க வந்தனர். அலுவலகங்களில் பணி புரிவோர் வந்தனர். தொழிற் கூடங்கிகளிலே பணிபுரிவோர் வந்தனர்.


அம்மட்டோ ? மாணவ, மாணவிகள் வந்தனர். உயர் நிலைப்பள்ளிகள், கல்லூரிகள் ஆகியவற்றிலுள்ள மாணவ மாணவிகள் பல நூறாயிரவர் எழுத்திதறிவிப்பு இயக்கத்தில் ஈடுபட்டனர்.


இவர்களில் எந்தப் பிரிவினரும், ஏற்கனவே, மேற் கொண்டுள்ள தங்கள் பொறுப்புகளைக் கழித்து விட்டு, புதுப் பொறுப்பிற்கு வரவில்லை. ஆசிரியர்கள் தங்கள் கல்விக் கூடப் பணியோடு, இப் பொதுத் தொண்டைக் கூடுதலாக மேற்கொண்டார்கள். அலுவலகத்தாரும் அப்படியே. மாணவ மாணவிகளும் தங்கள் படிப்பையும் கவனித்துக் கொண்டு, இத் தேசத் தொண்டை மேற்கொண்டார்கள்.


எழுத்தறிவு இயக்கத்தில் ஈடுபட்டோரில் பலர், மேற் கொண்டு ஊதியம் பெறாமல், தியாகிகளாகப் பணிபுரிந்தனர். குடும்பச் சூழ்நிலை காரணமாக, அதிகப் படியான ஊதியம் தேவைப்பட்ட ஓரளவினர் மட்டுமே, முதியோர் கல்விக்காக ஊதியம் பெற்றனர்.


சாதாரண கல்விக்கூட ஆசிரியர் கூட முதியோர் கல்விக்குப் பயிற்சி பெற்றவர் அல்ல அலுவலகத் தோழர் களுக்கும் மாணவ மாணவிகளுக்கும் கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போன்ற நிலை. ஆர்வம் பிடித்துத் தள்ள, எழுத்தறிவிப்பு இயக்கத்தில் குதித்துவிட்ட பல இலட்சம் பேருக்கும் முதியோர் கல்வி கற்பிப்பதற்கான பயிற்சி தேவைப்பட்டது.


பயிற்சிக் கூடங்களைத் தொடங்கி, வேலை செய்து கொண்டிருப்பவர்களை அங்கு இழுத்து வந்து, பயிற்சி கொடுத்து அனுப்புவது ஆகாத காசியம். அதிலே பெருங் கால தாமதம் ஏற்படும். குடும்பத்தை விட்டு நெடுந்துாரம் சென்று பயிற்சி பெறவேண்டிய தொல்லை ஏற்படும். வேகம் தடைப்படும். ஒட்டைச் சட்டியை வைத்துக்கொண்டு கொழுக்கட்டை சுட்டாக வேண்டிய நிலை.


இதற்கு ஒரு வழி கண்டுபிடித்தார்கள். அது என்ன ? முதியோர் கல்விக்கு ஆசிரியர்களாகப் போகிறவர்களுக்கு அஞ்சல் மூலம் பயிற்சி கொடுப்பது.


அத்துறையில் அனுபவமுடைய சிலரைக் கொண்டு, பயிற்சிக் குறிப்புகளை, உபாயங்களை எழுதி அச்சிட்டு அஞ்சல் மூலம் அனுப்பினார்கள். ஆசிரியர்களின் ஐயப் பாடுகள் உரியவர்களுக்கு, அஞ்சல் மூலம் சென்றன. நிபுணர்கள் அவற்றைக் கவனித்து விளக்கமாகப் பதில் எழுதி அனுப்பினர்.


இப்படி அஞ்சல் மூலம் பயிற்சி கொடுத்ததால் ஏராளமானவர்களுக்கு. விரைவாகப் பயிற்சி கொடுக்க முடிந்தது. எழுத்தறிவிப்பு வேலையையும் பெரும் அளவில் தொடங்க முடிந்தது. இப்புதுத் துறையில் ஒரளவு அனுபவப்பட்ட பிறகு அங்கும் இங்கும் கருத்தரங்குகளில் கூடி, சிக்கல்களை அவிழ்த்து, முறைகளைச் செப்பனிட்டுக்கொண்டு விரைந்து முன்னேறினர். திடீரென வந்த போரைச் சமாளிக்க எத்தனை வேகமாக உள்ளதை வைத்து, ஏற்பாடு செய்வார்களோ அப்படிச் செய்தனர், எந்நாட்டிலோ உள்ள நிலையையும் பயிற்சியையும் மெதுவான போக்கையும் குறிக்கோளாகக் கொண்டு மெல்ல நடக்கிற காரியமா முதியோர் எழுத்தறிவிப்பு ?


படித்தவர்களில் கிடைத்தவர்கள் அனைவரையும் பயன் படுத்தி, ஏதோ ஒரளவு சுருக்கமான பயிற்சி கொடுத்து, முதியோர் வகுப்புகளைத் தொடங்கி விட்டார்கள். முதியோர், அக் கல்விக்கூடங்களுக்குச் சென்று கற்கவேண்டுமே! கல்விக் கூடம் போக என்ன செய்தார்கள் ?


நாடு முழுவதிலும் பிரசாரம் செய்தார்கள் தீவிரமாகப் பிரசாரம் செய்தார்கள் ; அடுத்தடுத்து, நாடு முழுவதிலும், ஊர்தோறும் பிரசாரம் செய்தார்கள். செய்தவர் யார் ?


‘ஆட்சியாளர் ஆணையை அதிகாரிகளும் ஆசிரியர்களும் நிறைவேற்றட்டும்’, என்று கைகட்டிக் கொண்டிருக்க வில்லை, பொதுமக்கள். பிரசாரப் பொறுப்பை, கற்போரைத் திரட்டும் பொறுப்பை பொதுவுடைமைக் கட்சி ஏற்றுத் கொண்டது. கட்சியினரோ சிலர், மற்றவர்களோ பலர். அப் பலரும் பங்கு கொண்டனர். தொழிற் சங்கங்கள், ஆசிரியச் சங்கங்கள், மாணவர் கழகங்கள். எழுத்தாளர்கள், சொற் பொழிவாளர்கள் இப் புனிதப் பணியில் பெரிதும் ஈடுபட்டார்கள். படிப்பார்வத்தை முதியோரிடம் எழுப்பினர். அவர்களை இட்டுக்கொண்டு போய்க் கல்விக் கூடங்களில் சேர்த்தனர். ஒவ்வொருவரும் அவரவர் வாய்ப்புக்கு, ஆற்றலுக்கு ஏற்றபடி இதற்குத் துணை புரிந்தனர் என்று கேட்டபோது,


“ஆண்மையாளர்கள்

உழைப்பினை நல்கீர் !

மதுரத் தேமொழி

மாதர்கள் எல்லாம்

வாணி பூசைக்கு

உரியன பேசிர்!”


என்ற மகாகவி பாரதியின் வேண்டுகோள் நினைவில் வந்தது.

இங்கும் ஊதியமில்லாமல் தொண்டாற்றக்கூடிய படித்த வர்களுக்குப் பஞ்சமில்லையே! ஒய்வு நேரத்தில் சமூகப் பணியாற்றக்கூடிய மாணவ மாணவிகளுக்காவது குறைவா ? எத்தனை கோடி ஆண்மையாளர், நம்மிலே! அவர்கள் ஏற்கக் கூடிய ஆக்கப்பணியல்லவா முதியோர் கல்வி !

திரண்டு வாரீர் தொண்டாற்ற வாரீர் !

எழுத்தறிவிக்க அறிவொளி பரப்ப வாரீர் !




15. கலையின் விளக்கம்

கிடைத்தவர்கள் அத்தனை பேரையும் கொண்டு, எழுத்தறிவிப்பு இயக்கத்தைச் சட்டென்று நாடு முழுவதும் தொடங்கினார்கள். அப்போது அவர்கள் அரசியல் பொருளாதார நிலை எப்படி என்று கேட்டோம். எழுத்தறிவிப்பு இயக்கத்தைத் தொடங்கியபோது அரசியல் அமளி அடங்க வில்லை உள்நாட்டுக் குழப்பம் ஒரு பக்கம் வெளி நாடு களின் எதிர்ப்பு ஒரு பக்கம். பொருளாதார நிலையும் மோசம். இத்தனை இடையூறுகளுக்கு இடையிலேதான் அறிவுப் பேரியக்கம் வளர்ந்தது.


அலை ஒய்ந்து, தலை முழுகுவதென்றால் அது எப்போது முடியுமோ ? இடையூறுகளெல்லாம் நீங்கி, பொருள் குவிந்த பிறகே, பொது மக்களுக்குக் கல்வி என்றால் அது என்றைக்கு நடக்கும்?


சோவியத் ஆட்சித் தலைவர், தோழர் காலினின் அவர் களையே தலைவராகக் கொண்ட, எழுத்தறியாமை ஒழிப்புக் கழகத்தை அமைத்தனர். அக்கழகத்தில் ஐம்பது இலட்சம் உறுப்பினர்கள் சேர்ந்தனர். ஆகவே ஐம்பதினாயிரம் கிளை கள் தோன்றின. ‘அறியாமை அழிக’ என்ற முழக்கத்தை நாடு முழுவதும், ஊர்தோறும், வீடுதோறும் கலையின் விளக்கம் கண்டனர். எப்படி ?


உள்ளுர்க் கல்விக்கூடம், ‘கிளப்’, பொதுவிடம், எது கிடைத்ததோ, அங்கே, முதியோர் கல்விக்கூடங்களைத் தொடங்கினர் முதியோரைக் கொண்டுவந்து சேர்த்தனர்.


இம் முயற்சியில் பெரும் முட்டுக்கட்டை இருந்தது. தொடக்கத்தில் ஆண்களையே கல்விக் கூடங்களுக்கு இழுக்க முடிந்தது. வழிவழி வந்த பழக்கக் கொடுமையால் ‘கோஷா’ முறையால், குடும்பப் பொறுப்புச் சுமையால், பெண்கள் முதியோர் கல்விக்கூடங்களுக்கு அவ்வளவாகச் செல்ல வில்லை.


இதற்கு என்ன பரிகாரம் ? பெண்களின் வீடு தேடி, கல்வித் தொண்டர்கள் சென்றனர். அவரவர் வீட்டிலேயே. பாடங்கற்றுக் கொடுத்தனர். இரண்டொருவரே படிக்க வந்த போதிலும், அவர்களையும் ஒதுக்கிவிடாது பாடங்கற்றுக் கொடுத்தனர். எழுதப்படிக்க மட்டுமா கற்றுக் கொடுத்தனர்? இல்லை.


தாய்மார்களின் சிந்தையெல்லாம் குழந்தைகளைப் பற்றி யல்லவா ? குழந்தை வளர்ப்பைப் பற்றியும் குடும்ப நலனைப் பற்றியும் சொல்லிக் கொடுத்தனர் அன்றாட வேலைக்குப் பயனுள்ள, தையல், பின்னல் வேலைகளும் கற்றுக் கொடுத்தனர்.


முதியோர் கல்வி, குடும்பத்திற்குத் தேவையான அறிவை யும் திறமையையும் சேர்த்துக் கற்றுக் கொடுப்பதை உணர்ந்த பெண் இனம், மெல்ல மெல்ல அக்கல்வியின் பால் இழுக்கப்பட்டது. காலப்போக்கில் ஆண்களோடு பெண்களும் சரிநிகர் சமானமாகக் கல்வி பெற்றனர். இன்று ஆணும் பெண்ணும் ஒரு நிறை.


நாடு முழுவதும் விழித்தெழுந்து, பெருந் தலைவர்களே, பெரும் பாடுபட்டுப் பல்லாண்டு தொடர்ந்து அறியாமையை அழிக்கப் பணிபுரிந்ததால், இன்று அந்நாட்டு மக்கள் ‘எங்கள் நாட்டில் எல்லாரும் எழுத்தறிவு பெற்றவர்கள்’ என்று பெருமிதம் கொள்கின்றனர். உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ என்பதற்குச் சிறந்த எடுத்துக் காட்டல்லவா? இது மனமுண்டானால் இடமுண்டு என்பதையும் காட்டுகிறது இது.


“எய்தற் கரியது இயைந்தக்கால் அங்நிலையே

செய்தற் கரிய செயல்”


என்ற குறள் இலக்கணத்திற்கு இக்கால இலக்கியமாக விளங்குவது, சோவியத் நாட்டின் எழுத்தறிவிப்பு இயக்கமாகும்.


‘பசி நோக்காது, கண் துஞ்சாது, செவ்வி அருமையும் பாராது, கருமமே கண்ணாயிருந்து’ முதியோர்க் கெல்லாம் எழுத்தறிவு ஊட்டினார்களே. அது எவ்வளவு தூரம் பச்சென்றிருக்கிறது ? அறிவுப்பயிர் பச்சென்றிருப்பதற்கு அடையாளங்கள் எவை ? இருது அடையாளங்களை நாம் அறிந்தோம்.


முதல் அடையாளம் அம்முதியோர்களின் தொடர் கல்வி. கனவுகூட காணாத எழுத்தறிவு எப்படியோ கிட்டிவிட்டது. இது போதுமே’, என்று அங்குள்ள முதியோர் இல்லை. ஆணாயினும் சரி, பெண்ணயினும் சரி, மூன்று நான்கு திங்களில் பெற்ற எழுத்தறிவின் துணை கொண்டு மேலும் படித்தனர். ஏழெட்டு மாதங்களில் நன்றாகப் படிக்கக் கற்று கொண்டனர். பின்னரும் தொடர்ந்து படித்து எட்டாவது, பத்தாவது தேறிய முதியோர்களை ஏராளமாகக் காணலாம்.


“பாட்டாளிக்கு எழுதப் படிக்கத் தெரிந்தால் போதாதா? என்று கருதுவதில்லை. வெறும் பாட்டாளியாகத் தொடங்கிய முதியோர், நுட்பத் தொழிலாளியாக, நிபுணராகத் தகுதி தேடிக் கொண்டு உயர்வது அந் நாட்டில் சாதாரணமாகக் காணக் கூடியது.


உயர் தொடக்கக் கல்வி ; உயர்நிலைக் கல்வி, கல்லுரரிக் கல்வி ஆகிய பொதுக் கல்வி தவிர, ஏறத்தாழ முந்நூற்று இருபது, ‘தனிக் கல்வி’ வகைகள் சோவியத் நாட்டில் இருக்கின்றன.


இக்கல்லி வகைகளைப் பெறுவோர் அனைவரும் படிப்பைத் தவிர வேறு வேலை செய்யாத முழு நேர மாணவ மாணவியரா ? இல்லை.

முழு நேர மாணவரை விட, அலுவலிலோ தொழிலிலோ இருந்துகொண்டே, பகுதி நேரக் கல்விக்கூடத்திலோ, அஞ்சல் கல்விக்கூடத்திலோ சேர்த்து படிப்போரே அதிகம் பேர்.


பகுதி நேரக் கல்வி முறையும் அஞ்சல் கல்வி முறையும் மிகப் பரவலாக இருப்பதனால் மட்டுமே, இத்தனை ஏராள மானவர்களுக்கு, மூன்றில் ஒருவருக்கு ‘ஏழு கோடியே எழுபது இலட்சம் மக்களுக்கு, கல்வி வசதி செய்து கொடுக்கும் சுமையைத் தாங்க முடிகிறது. முதியோர் கல்வி பளிச்சென்று வளர்வதற்கு இரண்டாம் அடையாளம் ‘தனிக்கல்வி’ ஈடுபாடு ஆகும்.


பகுதி நேரக் கல்வியும், அஞ்சல் முறைக் கல்வியும் குறிப்பிட்ட நோக்கத்தைக் கொண்டவை-பயிற்சி அளிப்பதையோ, சான்றிதழ் வழங்குவதையோ, நோக்கமாகக் கொண்டவை. பகுதி நேரக் கல்வியும், அஞ்சல் முறைக் கல்வியும்-அமைப்பு முறைக் கல்வி குறிப்பிட்ட பயிற்சியையோ, சான்று இதழையோ நினைவில் கொண் டது. அமைப்பு முறைகளுக்கு அப்பால், தன்னிச்சையாக நடக்கும் கல்வி ஒன்றுண்டு. அது எது ?


அது நூல் படிப்பு. தாமே விரும்பி நூலை விலை போட்டு வாங்கிப் படிப்பதும், நூலகத்திலிருந்து நூலைக் கடன் வாங்கிப் படிப்பதும் அமைப்பில் அடங்காக் கல்வி. இத்தகைய கல்வியும் பெருமளவில் நடக்கிறது.


சோவியத் நாட்டில் நூல்கள் வெளியீடு மிக அதிகம். நூல்கள் வெளியானதும் விரைவிலே விற்று விடுகின்றனர். மக்கள் ஆர்வத்தோடு நூல்களை வாங்குகின்றனர். ஆட்சி யாளரும் ஆர்வத்தோடு ஊக்குவிக்கின்றனர். எப்படி ? நூல்களின் விலை மலிவாக இருக்கும்படி பார்த்துக் கொள்வதால்.


சோவியத் மக்களின் படிப்பார்வம் எத்தகையது ?

வெளியாகும் நூல்களில் நூற்றுக்கு இருபதையே சாதாரண மாகப் புரட்டிக்கொண்டே படித்துவிடலாம், மற்ற எண்பதும் கவனித்துக் கற்க வேண்டிய 'சீரியஸ்' பொருள் உடையவை என்பதை விளக்கினார்கள்.


சோவியத் மக்கள், மிகப் பெரும் அளவில் பொருள் உடைய நூல்களையே வாங்கியோ, எடுத்தோ படிக்கிறார்கள்; மக்கள் கல்வி வீண் போகவில்லையென்பதற்கு, இது மற்றோர் அடையாளம்.




17. ஈர உள்ளம்

ஆயிரத்துத் தொள்ளாயிரத்து ஐம்பத்தோராம் ஆண்டு, ஒரு நாள் காலை, நானும் என் மனைவியும் தொடக்க நிலைப் பள்ளியொன்றைப் பார்த்தோம் ;


நம் நாட்டில் அல்ல. பிரிட்டனில். அப்பள்ளியில் படித்தோர் சாதாரண குடும்பத் தினர். தலைமை ஆசிரியை எங்களைப் பல பகுதிகளுக்கும் அழைத்துக்கொண்டு போனார். மூன்றாம் வகுப்பில், கூட்டம் முடியும் வரை அங்கேயே இருந்தோம். நடவடிக்கைகளைக் கவனித்தோம் என்ன கூட்டம் தெரியுமா ? இளைஞர் செஞ்சிலுவைச் சங்கக் கூட்டம் அது, கூட்ட நடவடிக்கைகளில் புதுமை ஒன்றுமில்லை. நம் நாட்டில், நல்ல பள்ளிகளில் நடக்கும் இளைஞர் செஞ்சிலுவைச் சங்கக் கூட்டம் போலவே இருந்தது : வழக்கமான நிகழ்ச்சிகளுக்குப் பின் மாணவிகள் சார்பில் வேண்டுகோள் வந்தது. யாருக்கு வேண்டுகோள் ? என்ன வேண்டுகோள் ?


எங்களுக்கு வேண்டுகோள். இந்தியாவைப் பற்றிப் பேச வேண்டுமென்று வேண்டுகோள். அதை நாங்கள் எதிர் பார்க்கவில்லை. ‘நாடுகளுக்கிடையே நல்லெண்ணத்தை’ வளர்ப்பதும், இளைஞச் செஞ்சிலுவைச் சங்கத்தின் குறிக் கோள்களில் ஒன்று. எனவே, வேண்டுகோள் பொருத்தமானதே.


அந்த வேண்டுகோளை என் மனைவியைக் கைகாட்டி விட்டேன். “இந்தியாவைப்பற்றி நீங்கள் வினாக்களைக் கேளுங்கள். என் மனேவி பதில் சொல்லுவார்” என்று பொறுப்பை வேறு பக்கம் திருப்பி விட்டேன்.


மாணவிகள் பலர், ஒருவர் பின் ஒருவராகப் பல வினாக்களை எழுப்பினர். அத்தனைக்கும் பதில் கிடைத்தது. வினாக்களில் ஒன்றுகூட நம் நாட்டுப் பெரியவர்களைப் பற்றி இல்லை கேட்டது அனைத்தும் குழந்தைகளைப் பற்றியும் பள்ளிக்கூடம் பற்றியும் சிறுவர் சிறுமியர் வாழ்க்கையைச் சுற்றியுமே இருந்தன. இதோ சில எடுத்துக்கட்டு :


குழந்தைகளுக்குப் பிறந்தநாள் கொண்டாடுவீர்களா ? அப்போது என்னென்ன செய்வீர்கள் ?”


“நர்சரி பள்ளி நிறைய உண்டா ?"


“எந்த வயதில் தொடக்கப் பள்ளியில் சேர்ப்பீர்கள் ? ”


“வாரத்திற்கு எத்தனை நாள் பள்ளிக்கூடம் ?”


“நாளைக்கு எத்தனை மணி நேரம் பள்ளிக்கூடம் ?”


இவ்வகையில் சிறுவர் சிறுமியரைப் பற்றியே கேள்விகள் ஓடின.


“உங்கள் மாணவ மாணவிகள் எதில் எழுதுவார்கள் ?” இப்படியொரு கேள்வியைக் கேட்டு வைத்தாள், ஒரு மாணவி.


“தொடகத்தில் சில ஆண்டுகள் பலகையிலும் பின்னர் நோட்டிலும் எழுதுவார்கள்” - இது பதில்,


“ஏன் முதலிலேயே நோட்டில் எழுதி படிக்கக் கூடாது?” இக் கேள்வியை வேறு ஒருத்தி வீசினாள்.


“பலகையென்றால், ஒரு முறை எழுதி முடித்ததும், அதை அழித்துவிட்டு வேறொரு பாடத்தை எழுதிப் பழக லாம். ஒரே பலகை இரண்டொரு ஆண்டுக்கு வரலாம் நோட்டில் எழுதுவதென்றால் ஆண்டுக்குப் பல நோட்டுகள் வாங்கவேண்டியிருக்கும். அதற்கு நிறைய செலவல்லவா?" இப்படிப் பதில் கூறினார் என் மனைவி. உண்மையான பதில், ஆனாலும் நம் ஏழ்மையை இப்படி வெளிப்படுத்தலாமா என்று என் நெஞ்சம் வாடிற்று. சுதந்திரம் பெற்ற அண்மை காலமல்லவா அது.


மேற்கொண்டு சில வினாக்கள் பதில்களோடு நிகழ்ச்சி முடிந்தது. மாணவியொருத்தி நன்றி கூறி முடித்தாள். நாங்கள் எழுத்து, வெளியே செல்ல, ஓரடி எடுத்து வைத் தோம். அவ்வமயம் ஒரு மாணவி தலைதெறிக்க ஓடி வந்தாள். எங்களைத் தாண்டி முன்னேயிருந்த தலைமை ஆசிரியையிடஞ் சென்று நின்றாள்.


“விருத்தினர்களுக்கு ஒரேவொரு வேண்டுகோள் விடட்டுமா?” என்று அந்த அம்மாளின் அணுமதியைக் கோரினாள்.


“இவ்வளவு நேரம் கேட்டிருக்கக்கூடாதா” என்றார் அந்த அம்மாள்.


“பரவாயில்லை. கேட்கட்டும்” என்று சமாதானப்படுத்தி அனுமதி பெற்றேன். மாணவிக்கு சொல்ல முடியாத மகிழ்ச்சி.


“அம்மா, நான் ‘பேப்பர்’ கொடுக்கிறேன். கொண்டு போகிறீர்களா ?” என்று என் மனைவியைப் பார்த்து வேண்டினாள். என் மனைவி திகைத்தார். பளிச்சென்று நான் குறுக்கிட்டேன்.


“எங்கள் தாய்மொழியில் பேசுவதற்கு மன்னியுங்கள்” என்று தலைமை ஆசிரியையிடம் கூறிவிட்டு, என் மனைவி யிடம் தமிழில் பேசினேன். சிரிப்பை வலிய வரவழைத்துக் கொண்டு பேசினேன்.


“இது உன்னால் வந்த வம்பு, ‘நோட்’ வாங்க நிறையப் பணம் வேண்டுமே என்றதால் நமக்குப் பிச்சை கொடுக்க வந்திருக்கிறது, இப்பெண். நீ சும்மா இரு. நான் சமாளித்துக் கொள்கிறேன்,” இப்படிச் சொல்லிவிட்டு அந்த மாணவியோடு பேசினேன்.


“பலகையில் எழுதுவதா ; நோட்டில் எழுதுவதா ? என்பது பணத்தை மட்டும் பொருத்தது அல்ல, பழக்கத்தையும் சேர்ந்தது. எங்கள் நாட்டுப் பழக்கம், சில ஆண்டுகள் பலகையில் எழுதிய பிறகே, காகிதத்தில் எழுதுவது. இப் பழக்கத்தை மாற்ற எங்கள் நாட்டில், ஒப்புக்கொள்ள மாட்டார்கள். அதுனால் பேப்பர் வேண்டா. உன் நல்லெண்ணத்தித்து நன்றி என்று சமாளிக்க முயன்றேன்.


அக் குழந்தை என் பேச்சை நம்பினதாகத் தெரியவில்லை.


நான் நிறைய ‘பேப்பர்’ கொடுந்தனுப்புகிறேன், கொண்டு போய்க் கொடுங்கள்” என்று கெஞ்சிற்று. என்ன சொல் வதென்று தெரியாமல் இரண்டொரு வினாடி திகைத்தேன். இதற்கிடையில் மற்றொரு மாணவி என் உதவிக்கு வந்தாள்.


‘எலிசபெத், நீ மாலை வீடு திரும்பும்போது, என் வீட்டிற்குள் வந்து போ, என் தாத்தா வைத்திருந்து, எழுதிய பலகை எங்கள் விட்டில் பத்திரமாக இருக்கிறது. அதை உனக்குக் காட்டுகிறேன். நம் நாட்டிலும் முற்காலத்தில் பலகையில்தான் எழுதுவார்கள்’ என்றாள் அம்மாணவி. இன்னும் இரண்டொரு மாணவிகளும் தங்கள் வீட்டில் அத்தகைய பலகைகள் காட்சியில் இருப்பதாகக் கூறினார்கள். அதற்கப்புறமே விட்டாள், நன்கொடை கொடுக்க முனைந்த மாணவி.


பல ஆண்டுகளுக்குப் பின், கோவை நகரிற்குச் சென்றேன். தனியாகவே சென்றேன். கல்வி இயக்குநராகச் சென்றேன்.


நகரத் தொடக்க நிலைப் பள்ளி மாணவ மாணவிகளின் அணிவகுப்பும் விளையாட்டு விழாவும் சிதம்பரம் பூங்காவில் நடந்தன, அவற்றைக் காணச் சென்றேன். ஒவ்வொரு பள்ளிக் குழுவும் ஒவ்வொரு வகையில் வரவேற்றது. நகர சபைப் பள்ளி ஒன்று புதுமுறையில் வரவேற்றது. மற்றவர்கள் போல் மாலையிட்டு வரவேற்கவில்லை. முடிப்புக் கொடுத்து வரவேற்றது. என்ன முடிப்பு ? பண முடிப்பு ! எனக்கா ? இல்லை. என் கையில் கொடுத்தது, அவ்வளவே. எதற்கு அம் முடிப்பு ? தஞ்சை புயல் நிவாரண நிதிக்கு அது. அந்நிகழ்ச்சிக்கு முன், புயல், தஞ்சை மாவட்டத்தில், கோர விளையாட்டு விளையாடியது.


அந் நகரசபைப் பள்ளியில் படிக்கும் அனைவரும் ஏழைகள் பாட்டாளிகளின் மக்கள். ஆயினும், தஞ்சையில், புயலால் சேதப்பட்டு வாடுவோருக்கு உதவி செய்யத் துடித்தனர். அத்தனை பேரும்-ஒருவர் தவறாது - குறிப்பிட்ட தொகையைக் கொண்டுவந்து கொடுத்தனர். அதைப் பண முடிப்பாக்கி, என் கையில் கொடுத்துப் புயல் நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்தனர். அவர்களில் ஒருவரும் எதற்காகவும் என்னிடம் அதுவரை வரவில்லை. பின்னரும் வரவில்லை.


எலிசபெத், எதையும் எதிர்பார்த்து, என் மனைவியிடம் பேப்பர் கொடுத்தனுப்ப முன் வரவில்லை. இந்தியக், குழந்தைகளின் குறையைக் கேட்டதும் குறைபோக்க முன் வந்தது அவள் உள்ளம். முன்பின் அறியாதவர்களுக்குச் செய்யும் உதவியன்றோ மெய்யான அறம்,


கோவை நகரப் பாட்டாளிகளின் குழந்தைகள், தஞ்சை மாவட்டத்தில் வாடுவோருக்காகத் தியாகஞ் செய்ததும் பெயருக்கல்ல; புகழுக்கல்ல. ஒன்று போட்டு பின்னர் ஒன்பது எடுக்கும் அகவிலை வாணிகமல்ல, அவர்கள் செய்தது. அரசியல் சூதாட்டத்தின் பயிற்சியுமல்ல அது.


பிறர் துன்பம் கண்டு துடித்தல் இயற்கை. அம்மானிட இயல்பின் மலர்கள். மேற்கண்ட இரு செயல்களும். இம்மலர்களை வாடாமல் வதங்காமல் காக்க வேண்டாவா ? மானிட இனத்திற்கு எங்கே அல்லல் வந்தாலும் மற்றவர் விரைந்து சென்று துயர்துடைக்க வேண்டாவா ? இயற்கையுணர்ச்சி களெல்லாம் - நல்லுணர்ச்சிகளெல்லாம்- வறண்டே போயினவா ? மானுடம், சொத்து காக்கும், வெறும் இரும்புப் பெட்டியாக மாறி விட்டதா ?


இல்லையென்றால், பஞ்சைகள் பக்கம் பார்வை திரும் பட்டும். கை நீளட்டும், நன்கொடை பெருகட்டும், பட்டினி ஒடட்டும், வாழ்வு தழைக்கட்டும் என்று உங்கள் உள்ளம் உரைக்கிறதா ? நல்லது, பகுத்துண்டு வாழ்வோம் வாரீர்.


 

12 views0 comments

Related Posts

See All

Comments


bottom of page