top of page
library_1.jpg
Writer's pictureBibliomaniac

அசோகர் கதைகள் - III

பாவலர் நாரா. நாச்சியப்பன்



மூத்தோரைப் போற்று

⁠உயர்ந்தோரைப் போற்று என்றோ, பெரியோரைப் போற்று என்றோ, அந்த வாசகம் அமைந்திருந்தால், கல்வியால் உயர்ந்தோரைப் போற்று என்றோ, அறிவிற் பெரியோரைப் போற்று என்றோ, அனுபவத்தால் முதிர்ந்தோரைப் போற்று என்றே பொருளுரைத்துக் கொள்ளலாம்; மன அமைதி பெறலாம்! ஆனால் மூத்தோரைப் போற்று என்றால் வயதில் பெரியவர்களைப் போற்ற வேண்டும் என்பதைத் தவிர வேறு என்ன பொருள் கொள்ள முடியும்?


⁠அந்த வாசகத்தைப் பார்க்கப் பார்க்க இளைஞனுக்கு ஒருவிதமான அருவருப்பு வளர்ந்தது. மாமன்னர் அசோகர் சற்றும் பொருத்தமற்ற இந்த வாசகத்தையும் மற்ற வாசகங்களோடு இணையாக ஏன் எழுதினர் என்றுகூட நினைத்தான். அந்த வாசகத்தைப் படித்ததால் ஏற்பட்ட அதிருப்தி அவனுடைய முகத்திலே வெளிப்பட்டது மட்டு மல்லாமல் வாய்ச் சொற்களாகவும் வெளிப்பட்டது. ⁠"சற்றும் பொருத்தமற்ற வாசகம்! மூடத்தனமான வாசகம்!" என்று வாய்விட்டுத் தனக்குள் பேசிக் கொண்டான். ⁠"தம்பீ. எந்த வாசகத்தைச் சொல்கிறாய்?" என்று பின்னாலிருந்து ஒரு குரல் கேள்வி எழுப்பியது.


⁠இளைஞன் மகாலிங்க சாஸ்திரி திரும்பிப் பார்த்தான்.


⁠குடியானவரைப் போன்ற உடை யணிந்திருந்த ஒருவர் திண்ணைத் தூண் ஒன்றிலே முதுகை வைத்துச் சாய்ந்து கொண்டிருந்தார். அவருடைய உடைதான் அவரை ஒரு குடியானவர் போல் காட்டியதே தவிர, அவருடைய வளையாத உடலும் நிமிர்ந்தகன்ற மார்பும் நேர் கொண்ட பார்வையும் எல்லாம் ஒருவிதமான கம்பீரத்தை உருவாக்கிக் காட்டின. அவருடைய கண்களிலே தோன்றிய அந்த ஒளி இளைஞனின் உள்ளத்தை எளிதாகக் கவர்ந்தது.


⁠இளைஞன் மகாலிங்க சாஸ்திரியோ இரண்டு இதிகாசங்கள், நான்கு வேதங்கள், ஆறு சாத்திரங்கள், பதினெட்டுப் புராணங்கள், அறுபத்து நான்கு கலைஞானங்கள் அத்தனையும் ஆசான் மூலமாகப் பாடங்கேட்ட ஒரு வித்துவான். அந்த மனிதரோ ஒரு சாதாரண குடியானவர். இருந்தாலும் அவரிடம் தன்னேவிட ஏதோ ஒர் ஆற்றல் மிகப் பெரிய ஆற்றல் கூடுதலாக அமைந்திருப்பதாக இளைஞனுக்குத் தோன்றியது.


⁠"அதோ எழுதியிருக்கிறதே, 'மூத்தோரைப் போற்று' என்று, அந்த வாசகத்தைத்தான் சொல்கிறேன்" என்று இளைஞன் இந்தக் குடியானவருக்குப் பதில் கூறினன்.


⁠"அதிலே என்ன தவறு கண்டாய்?" திருப்பிக் கேட்டார் அவர்.


⁠"ஐயா, அறிவாலோ அனுபவத்தாலோ பெரியவர்களைப் போற்று என்றால் பொருளிருக்கிறது. வயதால் மூத்தவர்களைப் போற்று என்ற பொருளை மட்டும் தருகின்ற இந்த வாசகத்தில் என்ன சிறப்பு இருக்கிறது? வயதில் மூத்தவர்களை யெல்லாம் இளைஞர்கள் போற்றிக் கொண்டிருந்தால், மூடத்தனத்தை ஆராதிப்பதைத் தவிர வேறு என்ன பயன் காணமுடியும்? நானும் எத்தனையோ நூல்கள் கற்றிருக்கிறேன். அவற்றில் எதிலும் இம் மாதிரியான அசட்டுக் கருத்தை நான் பார்த்ததில்லை. ஒரு குடியிலே பலர் பிறந்திருந்தாலும், அவருள்ளே மூத்தவனை வருக என்று வரவேற்போர் ஒருவர் கூட இருக்கமாட்டார்கள்; அறிவுடையவனைத்தான் அரசனும் வழிபட்டு ஒழுகுவான் என்றெல்லாம் அறிஞர்கள் எழுதிவைத்த நூல்கள் முழங்குகின்றன. ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்று சொல்லி நீங்கள் என் கருத்தை மறுத்து விடலாம். என் சிறிய வாழ்க்கை அனுபவங் கூட இந்தக் கருத்துக்கு மாறானதாகவே யிருக்கிறது” என்று கூறினான் மகாலிங்க சாஸ்திரி.


⁠"தம்பி, உன்னுடைய வாழ்க்கை அனுபவத்தைக் கொஞ்சம் சொல்லுகிறாயா?" என்று வேண்டிக் கொண்டார் பெரியவர்.


⁠மகாலிங்க சாஸ்திரி, தன்னுள் அமைந்த ஏதோ ஒரு சூத்திரத்தைத் தட்டிவிட்டாற் போன்ற உணர்ச்சியுடன் முன்பின் தெரியாத அந்தக் குடியானவரிடம் தன் பிறப்பு வளர்ப்பெல்லாம் எடுத்துக் கூறத் தொடங்கி விட்டான்.


⁠"ஐயா, ராஜகிரியிலே மகா பண்டிதர் சாம்பசிவ சாஸ்திரியைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டதுண்டா? அவருடைய மகன்தான் நான். என்னுடன் கூடப் பிறந்தவர்கள் -அதாவது எனக்கு முந்திப் பிறந்தவர்கள்-மூவர். என் இனச் சேர்த்து நான்கு பேர். என் அண்ணன்மார் மூவரையும் பற்றி நான் சொல்லிவிட்டாலே இந்த வாசகம் பொருளற்றது என்பதைப் புரிந்து கொள்ளலாம். ⁠"என் தக்தை பல ராஜ சபைகளிலும் வித்வ சபைகளிலும் பாடிப் பெற்ற பரிசுகள் பலப்பல. பொன்னகவும் பொருளாகவும், வீடாகவும், நிலமாகவும் அவர் தம் கலை ஞானம் ஒன்றைக் கொண்டே ஏராளமான சொத்து சேர்த்திருந்தார்.


⁠"என் முதல் அண்ணன், பள்ளிக்கு ஒழுங்காகப் போகாமல் ஊர் சுற்றியாகவும் சூதாடியாகவும், தகாத நட்பினரோடு சேர்ந்து சுற்றிக் கொண்டிருந்தான். அவனைத் தம் கண்ணிலேயே விழிக்க வேண்டாம் என்று விரட்டியடித்து விட்டார் என் தந்தை. ஆனால் அவர் இறந்த வீட்டிற்கு அண்ணன் அழுதுகொண்டே ஓடி வந்தான். இறந்த வீட்டிற்குத் துன்பத்தோடு வருபவனை விரட்டியடிக்கவா முடியும்? துக்க வீட்டில் நுழைந்தவன், தானே மூத்தவன் என்று வழக்காடி என் தந்தைக்குக் கொள்ளி வைத்தான். பிறகு கொள்ளி வைத்த உரிமையைக் காட்டி வழக்காடி எல்லாச் சொத்துக்களுக்கும் தானே நிர்வாகியாகி விட்டான். பின்னால் சொத்தில் பங்கு கொடுக்க முடியாதென்று கூறி எங்கள் மூவரையும் வீட்டை விட்டு விரட்டியடித்து விட்டான்.


⁠"என் இரண்டாவது அண்ணன் ஒரு சோற்றுக் கட்டை. கல்வி அறிவும் கிடையாது; இயற்கை அறிவுங் கிடையாது; மூத்த அண்ணன் விரட்டியடித்த பிறகு, வீட்டை விட்டு வெளியேறிக் காசிக்குப் போய் அங்கு ஒரு சாஸ்திரி வீட்டில் சமையல் வேலை செய்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறான்.


⁠"மூன்றாவது அண்ணன் ஒரு பைத்தியம். அவனைக் கண்டால் என் தாய்க்கு அறவே பிடிக்காது; என் தந்தைக் கும் பிடிக்காது. என் தந்தை இருக்கும்போதே அவன் அரைப் பைத்தியமாக இருந்தான். பின்னல் அவர் இறந்து மூத்த அண்ணன் எல்லோரையும் விரட்டியடித்த பிறகு இப்போது முழுப் பைத்தியமாகி விட்டான்.


⁠"என் தாயோ, முத்த அண்ணனுக்குச் சாதகமாகப் பேசி எல்லாச் சொத்துக்களையும் அவனே ஆக்கிரமித்துக் கொள்ள உதவியாக இருந்தாள். அவன் கடைசியில் தன் மனைவியின் சொல் கேட்டு அவளேயும் அடித்து விரட்டி விட்டான். அவள் வீட்டு வேலைகள் செய்து கொடுத்துப் பிழைத்துக் கொண்டிருக்கிறாள்.


⁠"நான் என் தந்தையின் வழியைப் பின்பற்றிக் காசியில் ஒரு பண்டிதரிடம் சென்று கல்வி கற்று வருகிறேன். இப்போது ராஜகிரிக்கு என் தாயைப் பார்த்துவரத்தான் போகிறேன்.


⁠"இப்போது சொல்லுங்கள். என் அண்ணன்மார் மூன்று பேரும் என்னைவிட வயதில் மூத்தவர்கள்தாம். இவர்களில் யாருக்காவது கான் மரியாதை காட்டும்படியாக இருக்கிறதா? யாருக்கு நான் மரியாதை செய்து போற்ற வேண்டும் என்று சொல்லுகிறீர்கள்? எங்களை மோசம் செய்து வீட்டை விட்டு விரட்டிய மூத்த அண்ணனுக்கா? சோற்றுப் பிண்டமாகத் திரியும் என் இரண்டாவது அண்ணனுக்கா? அல்லது பைத்தியமாக விடுதியில் அடை பட்டுக் கிடக்கும் என் மூன்றாவது அண்ணனுக்கா?”


⁠இளைஞன் கேள்விக்கு அந்த மனிதர் உடனே பதில் சொல்லவில்லை. அவர் வாய் திறந்து பேசமுன் மகாவிங்க சாஸ்திரி மீண்டும் அவரைக் கேள்வி கேட்டான்.


⁠"என் வாழ்க்கை அனுபவத்தை அறிந்த பின்னும் நீங்கள் இந்த வாசகத்தை ஏற்றுக் கொள்ளச் சொல்லுகிறீர்களா? அசோகர் இப்படிப்பட்ட பொருளற்ற கருத்துக்களைப் பரப்பக் கூடாது!" ⁠மகாலிங்க சாஸ்திரியின் இச் சொற்களைக் கேட்ட அந்தக் குடியானவர் முகத்தில் ஒரு புன்சிரிப்பு உதித்தது.


⁠"நீங்கள் இன்னும் என் கருத்தை ஏற்றுக் கொள்ள வில்லை போலிருக்கிறதே!" என்று இளைஞன் மறுபடியும் கேட்டான்.


⁠இவ்வளவு சொல்லியும் அந்த மனிதருக்கு அறிவில் படவில்லையே என்ற எண்ணம் அவன் மனத்தில் தோன்றவில்லை. வேறு யாருமாயிருந்தால் அவர்களைப் பற்றி இளே ஞன் அப்படித்தான் எண்ணியிருப்பான். ஆனால, அந்தக் குடியானவரிடம் ஏதோ ஒரு பெரிய ஆற்றல் இருப்பது போல் அவனுக்குத் தோன்றியது. அவர் தன் கருத்தை ஏற்றுக் கொண்டு விட்டால், தான் ஒரு பெரிய சாதனை செய்த பலன் கிட்டும் என்பது போன்ற ஓர் உணர்வு அவனையறியாமல் அவன் மனத்தில் வேரூன்றி யிருந்தது.


⁠"தம்பீ. என்மீது உனக்கு நம்பிக்கை உண்டாகிறதா?” என்று சிரித்துக் கொண்டே கேட்டார் அவர்.


⁠"ஐயா இதற்கு முன் நான் உங்களைப் பார்த்ததோ, பழகியதோ கிடையாது. ஆனால், இன்று உங்களைப் பார்த்த உடனேயே, எனக்கு உங்கள் மீது ஒரு நம்பிக்கை உண்டாகி விட்டது" என்றான் இளைஞன்.


⁠"அது போதும்! நான் இவ்வளவு நேரமும் நீ கூறியவற்றைக் கேட்டுக் கொண்டுதான் இருந்தேன்; அவ்வளவும் கேட்ட பிறகு எனக்குத் தோன்றியது இதுதான்: உன் வாழ்க்கை அனுபவம் மிகச் சிறியது, அசோகருடைய அனுபவம் மிகப் பெரியது. நீ வாழ்க்கையின் ஒரு பக்கத்தை மட்டும்தான் கண்டிருக்கிறாய்; அசோகர் வாழ்க்கையின் இரு பக்கத்தையும் கண்டவர். அவர் முழுக்க முழுக்க அனுபவித்து அறிந்த உண்மைகளைத்தான் நாடெங் கும் பரப்பி வருகிறார். அவருடைய வாசகத்தின் உண்மையை உணர்ந்து கொள்ள நீ இன்னும் அனுபவம் பெற வேண்டும். அதற்கு நீ உன்னையே தியாகம் செய்து கொண்டு சோதனையில் ஈடுபட வேண்டும்.


⁠அவருடைய சொற்கள் அழுத்தமாக இருந்தன. அவை இளைஞன் மனத்தில் ஆழமாகப் பதிந்தன. அவருடைய சொல் எதையும் மீறிப் பேச வேண்டுமென்று அவனுக்குத் தோன்றவேயில்லை.


⁠தம்பீ, நான் உனக்கொரு வழி சொல்லுகிறேன். அந்த முறையில் நீ சோதனை செய்து பார். இந்தச் சோதனைகளுக்காக நீ மூன்று ஆண்டுகள் ஒதுக்கினால் போதும். என் சொல்லை நம்பி நீ உன் வாழ்க்கையில் மூன்று ஆண்டுகள் செலவிட முன் வருகிறாயா?” என்று அவர் கேட்டார்.


⁠முன் அறிமுக மில்லாதவராக இருந்தாலும் அவரை நம்ப வேண்டும் என்று ஒர் உள்ளுணர்ச்சி கூறியது.


⁠"சொல்லுங்கள்" என்றான் மகாலிங்க சாஸ்திரி.


⁠"முதலில் உன் பைத்தியக்கார அண்ணனைப் போய்ப் பார். பைத்தியக்கார விடுதியிலிருந்து, நீ இருக்கும் இடத்திற்கு அவனை அழைத்துக் கொண்டு வந்துவிடு. அவனை உனக்கு மேலானவனாக மதித்து மரியாதை செய். அன்பு காட்டு. ஆதரித்துக் காப்பாற்று. ஓர் ஆண்டுக்குப் பிறகு சித்திரை மாதத்து முதல் வெள்ளிக்கிழமையன்று இதே இடத்தில் என்னே வந்து பார். அப்போது நான் அடுத்த சோதனையைப் பற்றிக் கூறுகின்றேன்" என்றார் அந்தக் குடியானவர்.


⁠“சரி” என்றான் இளைஞன். அந்தச் சொல்லை அவன் காப்பாற்றுவான் என்ற நம்பிக்கை அந்தக் குடியானவருக்கு இருந்தது. அவன் குடியானவரைப் பற்றி எதுவும் விசாரித்துக் கொள்ளவில்லை. உடன் வந்த பிராமணர்களெல்லாம் தூங்கி எழுத்தபின் அவர்களோடு புறப்பட்டுச் சென்றான். போகும்போது குடியானவரிடம் "போய் வருகிறேன்" என்று சொல்லி விடைபெற்றுக் கொண்டான்.


⁠சரியாக ஓராண்டு கழிந்தது. புத்தாண்டு பிறந்தது. சித்திரை மாதம் முதல் வெள்ளிக்கிழமை வந்தது. மகாலிங்க சாஸ்திரி அன்று நண்பகல் நேரத்தில் அந்தக் கிராமத்துச் சத்திரத்துக்குள் நுழைந்தான். அவனை எதிர்பார்த்துக் கொண்டு அந்தக் குடியானவர் காத்திருந்தார்.


⁠அவர் அருகில் சென்றவுடனேயே அவன் தானாகப் பேசத் தொடங்கினன். ஆனந்தத்தோடு "ஐயா, என் அண்ணனுக்குப் பைத்தியம் தெளிந்துவிட்டது!" என்று கூறினான்.


⁠"எப்படி?" என்று கேட்டார் குடியானவர்.


⁠"என் தாய்க்கு மூத்த அண்ணன் மேல் பற்று அதிகமாயிருந்தது. என் தந்தைக்கு இரண்டாவது அண்ணன்மேல் பாசம் அதிகமாயிருந்தது. என் மூன்றாவது அண்ணனுக்கு யாருடைய அன்பும் கிடைக்கவில்லை. அந்த ஏக்கம் அவனை வாட்டிக் கொண்டிருந்தது. நான் பிறந்த பின், தாய் தந்தை இருவருமே கடைசிப் பிள்ளையான என்னிடம் மிகுந்த அன்பு செலுத்தினர்கள். அந்த நிலையில் என் மூன்றாவது அண்ணன் முற்றிலும் ஒதுக்கப்பட்டவணுகி விட்டான். அன்புக்காக ஏங்கி ஏங்கி அவனுக்குப் பைத்தியம் பிடித்து விட்டது.


⁠"சென்ற ஆண்டு நான் என் தாயைப் பார்க்கப் போனபோது தங்கள் கருத்துப்படி அண்ணனை என்னுடன் அழைத்து வந்து வைத்துக் கொள்ளப் போவதாகச் சொன்னேன். ⁠"அவன் பைத்தியமாயிற்றே, வேண்டாம்" என்று முதலில் மறுத்தாள். பிறகு நான் ஒரே பிடிவாதமாயிருந்ததால் ஒப்புக் கொண்டாள். அவளும் எனக்குத் துணையாக வீட்டில் வந்திருந்து அண்ணனைக் கவனித்துக் கொள்ள முன் வந்தாள். நான் அண்ணனைப் பைத்தியக்காரனாகக் கருதாமல் அன்பும் மரியாதையும் காட்டி நடந்து கொண்டேன். இதைக் கண்டு என் தாயும் அவனிடம் அன்பாக நடந்து கொண்டாள். பிள்ளைப்பாசம் அப்போதுதான் அவளுக்கு ஏற்பட்டது. எங்கள் அன்பு கிடைக்கத் தொடங்கியபின், அண்ணனுடைய பைத்தியம் சிறிது சிறிதாகத் தெளிய ஆரம்பித்தது. இப்போது அவன் முற்றிலும் தெளிந்தவனாகி விட்டான். ராஜகிரியில் உள்ள ஒரு கோயில் மடப்பள்ளியில் அவன் வேலை பார்த்து வருகிறான்” என்று சொல்லி முடித்தான் இளைஞன்.


⁠"சரி, அடுத்த சோதனையை நான் இப்போது சொல்லுகிறேன். நீயும் உன் மூன்றாவது அண்ணனும் இப்போது உங்கள் இரண்டாவது அண்ணனைப் போற்றி நடக்க வேண்டும். ஓராண்டுக்குப் பிறகு இதே சத்திரத்தில் சித்திரை மாதத்து முதல் வெள்ளிக்கிழமையன்று என்னை வந்து பார்" என்றார் குடியானவர்.


⁠"சரி, அப்படியே செய்கிறேன்" என்றான் அந்த இளைஞன். அன்று பகல் அவன் சத்திரத்திலேயே மற்றவர்களோடு சாப்பிட்டான். தனிச் சாப்பாடு தேடிப் பிராமணர் வீட்டுக்குப் போகவில்லை. புத்த பெருமான் கொள்கைகளில் அவனுக்குப் பற்று ஏற்பட்டிருந்தது. மாலையில் திரும்பவும் ராஜகிரிக்குப் புறப்பட்டுச் சென்றான்.


⁠மறுபடியும் ஓராண்டு கழிந்தது. சித்திரை மாதத்து முதல் வெள்ளிக்கிழமை சத்திரத்துத் திண்ணையில் அந்தக் குடியானவர் அவனுக்காகக் காத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார். அவனும் உரிய நேரத்தில் வந்து சேர்ந்தான்.


⁠"ஐயா, காங்கள் இப்போதுதான் இன்பமாக, குடும்பமாக வாழ்கிறோம். என் அண்ணன்மார் இருவரும் என் மேல் மிகுந்த அன்பு வைத்திருக்கிறார்கள். என் தாயும் எங்கள் மூவரையும் தான் பெற்ற செல்வங்கள் என்று கருதுகிறாள். ஒருவர் மீது ஒருவர் அன்பு கொண்டு வாழ்கிறோம். பெரிய அண்ணன் கூட இல்லையே என்ற ஒரு குறையைத் தவிர வேறு எதுவும் இல்லை. இரண்டாவது அண்ணன் இப்போது எழுதப் படிக்கத் தெரிந்து கொண்டான். சமையற்கலை பற்றி ‘பாக சாஸ்திரம்' என்ற பெய ரில் அவன் எழுதிய புத்தகத்துக்கு ராஜகிரி மன்னர் பரிசு கொடுத்துச் சிறப்பித்திருக்கிறார்" என்று மகிழ்ச்சியோடு கூறினான் மகாலிங்க சாஸ்திரி.


⁠"இந்தக் குடும்பப் பிணைப்பு ஏற்படக் காரணம் என்ன வென்று நினைக்கிறாய்?" என்று கேட்டார் குடியானவர்.


⁠"அசோகருடைய பொன்மொழியும், அதைப் பின் பற்றிப் பார்க்க வேண்டுமென்ற தங்கள் தூண்டுதலும் தான் காரணம்" என்று இளைஞன் பதிலளித்தான்.


⁠"இன்னும் ஒரே ஒரு சோதனை. இது சிறிது கடுமையான சோதனைதான். இதையும் செய்து பார்த்துவிடு" என்றார் குடியானவர். இளைஞன் கவனமாக அவர் கூறியதைக் கேட்டான்.


⁠"தம்பி, இப்போது நீங்கள் மூன்று பேரும் உங்கள் பெரிய அண்ணன் வீட்டுக்குச் செல்லுங்கள். பணம் எதுவும் வேண்டாம் என்றும், உங்களுக்கு ஏதாவது வேலை கொடுத்து வயிற்றுக்குச் சோறு போட்டால் போதும் என்றும் கேளுங்கள். அவன் வீட்டுக்கு உங்கள் தாயை முதலில் கூட்டிச் செல்ல வேண்டாம். வீட்டில் நீங்கள் இடம் பெற்ற பிறகு, உங்கள் அண்ணனிடம் மட்டுமல்லாமல் அண்ணியிடமும் மரியாதையாக நடந்துகொள்ளுங்கள்" என்று சோதனையின் விவரத்தைக் கூறினர் குடியானவர்.


⁠வழக்கம்போல் அடுத்த ஆண்டு சித்திரைமாதம் முதல் வெள்ளிக்கிழமையன்று தம்மை வந்து சந்திக்கும்படி அவர் சொல்லத் தவறவில்லை.


⁠ஒராண்டுக்குப் பிறகு இளைஞன் அவரைச் சத்திரத்தில் சந்தித்தான்.


⁠"அசோகர் வாக்கு அமுத வாக்கு! ஐயா, இப்போது எங்கள் அண்ணன் தானகவே எங்களுக்குப் பல வசதிகள் செய்து கொடுத்திருக்கிறான் வாணிபத்தில் வரும் லாபத்தை எங்கள் ஒவ்வொருவர் பெயருக்கும் நிலம் வாங்கக் கூடப் பயன் படுத்தியிருக்கிறான்” என்று மகாலிங்க சாஸ்திரி மகிழ்ச்சியோடு கூறினான்.


⁠"தம்பீ. இந்த மாறுதலுக்குக் காரணம் என்னவென்று நினைக்கிறாய்?"


⁠"அம்மா அதிகம் செல்லம் கொடுத்ததால் அவன் தான்தோன்றியாக வளர்ந்தான். அப்பாவின் அளவுக்கு மிஞ்சிய திட்டமான கண்டிப்பு அவர்மீது வெறுப்பைத் தூண்டவே அவன் கட்டுப்பாடற்ற தறுதலையாக மாறி விட்டான். நாங்கள் யாவரும் அவனை மதிக்காமல் இருக்கவே அவன் எங்களைப் பகைவராகக் கருதி வீட்டை விட்டுத் துரத்தி விட்டான். இப்போது நாங்கள் எல்லோரும் அவனை மதித்துப் போற்றி நடந்ததைப் பார்த்தும், எங்களுக்குள்ளே நிலவும் அன்பைக் கண்டும் அவனும் மனம் மாறி விட்டான். ஐயா, உங்கள் பேச்சைக் கேட்டதால் எங்கள் குடும்பமே புது வாழ்வு பெற்றுவிட்டது" என்று கூறினன் இளைஞன்.


⁠"இனிச் சோதனை எதுவும் தேவையில்லை. அசோகர் எழுத்துப் பொருள் பெற்றுவிட்டதல்லவா?" என்று கூறிச் சிரித்தார் குடியானவர்.


⁠"ஐயா, அசோகரை நேரில் பார்க்கவேண்டும் என்ற ஆசை எனக்கு ஏற்பட்டிருக்கிறது" என்றான் இளைஞன்.


⁠"அசோகரை யாரும் எளிதாகப் பார்க்கலாம். தலைநகருக்குப் போனால் அரண்மனையில் அவரைப் பேட்டி காணலாம். சாதாரண குடியானவனை என்னிடம் பேசுவது போலவே அவரிடம் எந்தப் பிரச்சினை பற்றியும் பேசலாம்" என்று கூறினர் குடியானவர்.


⁠மகாலிங்க சாஸ்திரி அன்றே தலைநகருக்குப் புறப்பட்டான். அதற்கு வேண்டிய ஆயத்தங்களோடுதான் அவன் ராஜகிரியிலிருந்து புறப்பட்டு வந்திருந்தான்.


⁠அரண்மனையில் மாமன்னரைப் பார்க்க அவனுக்கு எளிதாக அனுமதி கிடைத்தது. மணி மண்டபத்தில் அரசர் வருகைக்காகக் காத்திருந்த பலரோடு அவனும் காத்திருங்தான். கணீர் என்ற மணியோசையைத் தொடர்ந்து எழுந்த வீணையின் மெல்லிய நாதத்துடன் அரசர் மண்டபத்தினுள் நுழைந்தார். அரியணையில் அவர் அமர்ந்தபின் எல்லோரும் எழுந்து வணங்கி நின்றனர்.


⁠மகாலிங்க சாஸ்திரி மாமன்னரைக் காண விரும்புவதாக அரண்மனை அதிகாரி கூறினார். இளைஞன் எழுந்து நின்றான். அவன் வாய் திறக்குமுன் அசோகரே பேசினார்:


⁠"அமைச்சர்களே, மகாலிங்க சாஸ்திரியை நான் நன்கு அறிவேன், அவர் இளைஞராயினும், பெரிய பண்டிதர், அவருடைய பணி நம் அரசுக்கு இன்றியமையாதது. அவரை நான் கமது மாவட்ட நீதிபதிகளிலே ஒருவராக நியமிக்கிறேன். இந்த ஆண்டுமுதல் அவர் ஒரு பிரதேச மகாமந்திரராகப் பதவி ஏற்று நமது அரசுக்குப் பணிபுரிய ஆணையிடுகிறேன்" என்று கூறினார்.


⁠அவருடைய குரலும் தோற்றமும் அவர் யார் என்பதை இளைஞனுக்குத் தெளிவாக்கிவிட்டன. குடியானவர் உருவத்தில் வந்து தன்னைக் கவர்ந்துகொண்ட பெருமான் அவர்தாம் என்று அறிந்து மகாலிங்க சாஸ்திரி ஆனந்த வெள்ளத்தில் மிதந்தான். அன்பு வளர்க்கும் அண்ணல்


⁠அந்தக் காடு நல்ல அடர்த்தியான காடு, கங்கை நதிக் கரையிலே உள்ள காடு வேறு எப்படியிருக்கும்! வானுறவோங்கி வளர்ந்ததோடு நெருங்கி அடர்த்திருந்த மரங்கள், அந்தக் காட்டில் பகலவன் ஒளி பாயாமல் செய்தன; ஒரே இருட்டு மயமாகத் தோன்றும்படி செய்தன. . ⁠அந்தகாரம் நிறைந்த அந்தக் காட்டிலே, அதன் தன்மைக்கு ஏற்பவே பல கொடிய மிருகங்கள் நிறைந்திருந்தன. அந்தக் காட்டுப் பாதையில் கொள்ளைக்காரர்கள் கூடப் போகப் பயப்படுவார்கள். அவர்கள் அங்கே போகவேண்டிய வேலையே இல்லை. யாராவது மக்கள் போகும் இடமாக இருந்தால்தானே அவர்களுக்கு அங்கே வேலையிருக்கும்!


⁠இதற்காக அந்தக் காட்டை மனித நடமாட்டமே இல்லாத காடு என்று ஒதுக்கிவிட முடியாது. அங்கே மனித நடமாட்டமும் இருக்கத்தான் செய்தது. எப்படி யென்றால், இளவரசர்களும், வேட்டை வீரர்களும் போரில்லாத நாட்களிலே தங்கள் வீர விளையாட்டுக்களை நடத்திப் பார்க்க அங்கேதான் போவார்கள்.


⁠சீறிப் பாயும் சிங்கத்தின் வாயைப் பிளக்க வீரவாளை எப்படி வீச வேண்டும்? பதுங்கியிருந்து பாயும் புலியை ஒதுங்கியிருந்து அம்பெய்து உயிரைப் போக்குவது எப்படி? காட்டெருதுக்குச் சினத்தை மூட்டி, அதன் ஓட்டத்தில் வேகத்தைக் கூட்டி, வேலெய்து, விலாப்புறத்தைப் புண்ணாக்குவதெப்படி? கோட்டை வாயிலிலே கட்டிவைக்க, தனித்து வரும் யானையைப் பிடித்துவருவது எப்படி ? அரண்டு மிரண்டு, இருண்டு கிடக்கும் புதர்களின் பின்னே பதுங்கியிருக்கும் மானினங்களைக் கலைத்துவிட்டு அவை பயந்து பாய்ந்தோடும் வேகத்தோடு போட்டி போட்டுச் செல்லும்படி காணிமுத்து அம்பெய்து அவற்றை வீழ்த்துவது எப்படி? இப்படிப்பட்ட விளையாட்டுக்களுக்காக அங்கே வீரர்கள் வருவார்கள்.


⁠அப்படிப்பட்ட வீரர்களிலே ஒருவன்தான் காசி இளவரசன் ஈசுவர நாதன். இளவரசன் ஈசுவர நாதன் கம்பீரமான தோற்றமுடையவன். வீரமும் ஆண்மையும் மிக்குடையவன்.


⁠காசி அப்போது மாமன்னர் அசோகரின் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. காசி மன்னனை அசோகர் தம் அரசப் பிரதிநிதியாக நியமித்திருந்தார். அசோகர் தம் கீழ் உள்ள அரசர்களை, என்றும் தாழ்வாக மதித்ததில்லை. அவருடைய வாழ்விலே புனிதமான மாற்றம் ஏற்படுவதற்கு முன்புகூட, தம்மிடம் கப்பம் கட்டிவரும் சிற்றரசர்களை அவர் கொடுமைப் படுத்தியதோ, இழிவாக நடத்தியதோ கிடையாது. அசோகர் புதிதாகப் போருக்கு எழுந்ததில்லை; அவருடைய முன்னேர்கள் வீரப் போரிட்டுச் சேர்த்த நாடுகளை அவர் சிதறிப்போகாமல் திறமையாகத் தம் நேரிய ஆட் சியில் பிணைத்து வைத்திருந்தார்.


⁠காசியும் அவரால் வெல்லப்பட்டதல்ல. ஈசுவர நாதனுடைய பாட்டன் இறந்தபின், அசோகர் அவனுடைய தங்தையைத் தம் சிற்றரசராக ஏற்றுக்கொண்டு, தம் அரசப் பிரதிநிதியாக அதிகாரம் கொடுத்துக் காசி நாட்டின் ஆட்சியை அவர் கையில் ஒப்படைத்திருந்தார். ஈசுவரநாதனின் தந்தையும் அசோகரிடம் விசுவாசமாக நடந்துகொண்டார். ஆனால் ஈசுவரநாதன் விவகாரம் அப்படிப்பட்டதல்ல.


⁠அரச பரம்பரையிலே பிறந்த ஈசுவரகாதன் தீவிரமான சுதந்திர உணர்ச்சியுள்ளவன். அத்தோடு அவனது இளமைப் பருவம் அவனுக்குச் சுதந்திர ஆவேசத்தையே ஊட்டியிருக்தது என்று சொல்லவேண்டும். அவன் மனத்துக்குள்ளேயே தன் தந்தையின் போக்கை வெறுத்தான்.


⁠தன் பாட்டன்தான் போரிலே தோற்றான் என்றால், தக்தை ஏன் தன் ஆண்மையைக் காத்துக்கொண்டிருக்கக் கூடாது? ஏன், தன் நாட்டைப் போரிட்டு மீட்டுக்கொண்டிருக்கக்கூடாது?-என்று அவன் மனத்திற்குள்ளேயே துடிப்பான். தன் காலத்திலாவது மவுரியர்களின் ஆட்சியினின்றும் காசியை மீட்டுவிட வேண்டும் என்ற எண்ணம் அவன் மனத்திற்குள்ளே கருவாகி உருவாகி வளர்ந்து கொண்டிருந்தது.


⁠காசி இளவரசன் ஈசுவரதாதன் தன் தோள்வலியைப் பெருக்கிக் கொள்வதற்காகவும், அரசியல் முறைகளையும், இராஜதந்திரக் கோட்பாடுகளையும் அறிந்துகொள்வதற்காகவும் தீவிரமாக முயன்றுவந்தான். அவனுடைய ஆர்வத்தையும் வேட்கையையும் கண்ட அவனுடைய தந்தை அவனுக்குப் பெரும் பொறுப்புக்களைக் கொடுத்துப் பாதி அரசாங்க வேலைகளை அவனைக்கொண்டே முடித்துக் கொண்டார்.


⁠அரசாங்க வேலைகள் இல்லாத ஓய்வுநேரத்திலே ஈசுவர நாதனையும் அவனுடைய தோழர்களையும் வேட்டைக் காட்டிலேதான் பார்க்கலாம்.


⁠அன்று ஒரு நாள் வழக்கம்போல வேட்டைக் காட்டுக்கு ஈசுவரனாதனும் தோழர்களும் சென்றிருந்தனர். வழக்கத் திற்கு மாருக அன்று ஒரு பயங்கர நிகழ்ச்சி நடந்தது.


⁠ஈசுவரகாதனுக்கு நேர் எதிராக ஒரு சிங்கம் வந்து விட்டது.


⁠கூட வந்த தோழர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நின்று விட்டார்கள். இளவரசனை விட்டு விட்டு ஓடுவதா? அப்படியே ஒடுவதென்றாலும் அதற்குக் கூட அச்சத்தால் அவர்கள் கால்கள் நகரவில்லை. ஈசுவர நாதனும் சிங்கமும் நேருக்கு நேரே நின்றார்கள்.


⁠அந்தச் சிங்கம் மிகுந்த பசியோடு இரை தேடிக் கொண்டு புறப்பட்டு வந்திருந்ததுபோலும். வாலைத் தூக்கிக் கொண்டு, எதிரே நின்ற ஈசுவரநாதனை நோக்கிப் பாய்ந்து வந்தது. ஈசுவரநாதன் இமை கொடிக்கும் நேரத் திற்குள்ளாக எதிர்த்துப் போரிட ஆயத்தமாகிவிட்டான். வாளை உருவிக் கொண்டு சிங்கத்தை எதிர்த்துத் தாக்கி னான். அது தன்மீது பாய்ந்தபோது சட்டென்று விலகிக் கொண்டான். பாய்ந்த வேகத்தில் அது படீரென்று தரையில் விழுந்தது. அது திரும்ப எழுவதற்குள் ஈசுவரநாதன் அதன் முதுகின் மேல் பாய்ந்து விலாவில் தன் வாளைப் பாய்ச்சி விட்டான். மிகுந்த ஆரவாரத்தோடு சிங்கம் இளவரசன் பக்கமாகத் திரும்பியது. அதன் விலாவில் பாய்ந்த வாளை உருவிச் சுழற்றிச் சுழற்றி அதன் முகத்தில் பல காயங்களை உண்டாக்கினான் இளவரசன். கடைசியில் சிங்கம் வாயைப் பிளந்து கொண்டு அவனைக் கடித்துக் குதறிவிட முன் வந்தது. தன் வாளை அதன் தொண்டைக் குழிக்குள் பாய்ச்சிக் கொன்று விட்டான் ஈசுவர நாதன்.


⁠தோழர்கள் ஆரவார முழக்கங்கள் எழுப்பிக் கொண்டு ஈசுவர காதனைச் சூழ்ந்து கொண்டார்கள். தனியொருவனாக நின்று சிங்கத்துடன் நேருக்கு நேர் போராடி அதைக் கொன்றொழித்த அவன் வீரத்தைப் பலபடப் பாராட்டினர்கள். இரண்டு வீரர்கள் அந்தச் சிங்கத்தை ஒரு மரக் கொம்பிலே தொங்கவிட்டுத் தங்கள் தோள்களிலே அந்த மரக்கொம்பைத் தாங்கிக் கொண்டார்கள். வெற்றிக் களிப்போடு அவர்கள் நகர் நோக்கித் திரும்பினார்கள்.


⁠திரும்பும் வழியில், அவர்கள் வரும் ஓசை கேட்டுப் புதருக்குள்ளே ஒளிந்திருத்த மான் ஒன்று தப்பி ஓடுவதற்காக வெளிப்பட்டுப் பாய்ந்தோடியது.


⁠"இளவரசே, தங்கள் வெற்றி விருந்துக்கு இந்த மான் பயன்படுமே" என்று தோழன் ஒருவன் கூறினான்.


⁠அவன் கூறி முடிப்பதற்கு முன்னால் மான் அம்புபட்டு வீழ்ந்தது. ஈசுவரனாதன் அவ்வளவு விரைவாக நாணேற் றிக் குறி பார்த்து அம்பெய்து ஒடும் மானைச் சாய்த்து விட்டான். அந்த மானையும் தோழர்கள் தூக்கிக் கொண் டார்கள். வழி முழுவதும் தோழர்கள் இளவரசனைப் போற்றிப் புகழ்ந்து கொண்டே நடந்தார்கள்.


⁠நகருக்குள் அவர்கள் நுழைந்தபோது, அவர்களைச் சுற்றி ஒரு சிறு கூட்டமே கூடிவிட்டது. சிங்கத்தைக் கண்டு வியப்போரும், சிங்கத்தைக் கொன்ற இளவரசனுடைய வீரத்தைப் பாராட்டுவோரும், அவர்கள் ஊர்வலத்தை வேடிக்கை பார்ப்போருமாகக் கூட்டம் கூடி விட்டது. அந்தக் கூட்டத்தினர் இளவரசன் குழுவினரை அரண்மனை வாயில் வரையில் தொடர்ந்து சென்றனர். பின்பு கலந்து சென்று விட்டனர்.


⁠இளவரசன் ஈசுவரகாதன் வெற்றிக் களிப்போடு அரண்மனையினுள் நுழைந்தான். வந்து சேர்ந்த சிறிது நேரத்திற்குள் அங்கு தான் வருமுன்னரே விருந்து ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதை அறிந்து வியப்படைந்தான்.


⁠இந்தத் திடீர் விருந்து யாருக்காக என்று அறிய அவன் மனம் அவாக் கொண்டது.


⁠அதற்குள் அவன் தந்தையே எதிர்ப்பட்டு அவன் கேள்விக்கு விடையளித்து விட்டார்.


⁠மாமன்னர் அசோகர் காசிக்கு வருகிறாராம். புத்த சங்க கிர்மாணத்திற்காக வரும் அவர் ஒரு வேளை அரண்மனையில் விருந்துண்ண ஒப்புக் கொண்டிருக்கிறாராம். அவருக்காகத்தான் விருந்து ஏற்பாடுகள் நடைபெறுகின்றனவாம். ⁠மாமன்னர் அசோகரை ஈசுவரநாதன் அதற்குமுன் நேரில் பார்த்தது கிடையாது. அன்று அவரை நேரில் பார்க்கப் போகிறோம் என்ற மனக்கிளர்ச்சி ஒரு புறம். அவருக்கு விருந்து வைப்பதற்காகத் தனக்கு அந்த மான் சிக்கியதோ என்ற எண்ணம் ஒருபுறம். இப்படிப் பல திறப்பட்ட எண்ணங்களோடு உலவினால் ஈசுவரகாதன்.


⁠மாமன்னர் அசோகரைப் பற்றி அவள் நிறையக் கேள்விப்பட்டிருக்கிறான். அவனுடைய தந்தையே அவருடைய சிறந்த குணங்களைப் போற்றிப் பலமுறை பேசக் கேட்டிருக்கிறான்.


⁠யாரும் எப்போதும் அசோகரைப் பற்றிக் குறைவாகப் பேசியதே கிடையாது. உலக முழுவதும் போற்றும் அவருடைய பெருமைகளைக் கேட்டுக் கேட்டு, தானும் அவரைப்போல் பெருமைக்காளாக வேண்டுமென்ற ஓர் ஆசை அவன் உள்ளத்தின் அடியிலே ஊறியது. எல்லாவற்றுக்கும் முதலாக அவன் தன் காட்டை அசோகரின் ஆட்சியிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று முடிவு செய்திருந்தான். தன் ஆட்சியில் நாடு வரும்போது, நிச்சயமாக அடிமைத் தளையை உடைத்தெறிந்து சுதந்திர ஆட்சியை நிலைநாட்ட வேண்டுமென்று அவன் வீர உள்ளம் துடித்துக் கொண்டிருந்தது. தன் காட்டை அடிமைப்படுத்தி யிருப்பவர் என்ற முறையில் அவனுக்கு அசோகர் மீது ஒரளவு வெறுப்பு இருந்தபோதிலும், அவருடைய புகழைக் கேட்டு கேட்டு அவரைத் தன் இலட்சிய நாயகராக அவன் ஏற்றுக் கொண்டிருந்தான். அந்த இலட்சிய நாயகரைக் காணப் போகிறோம் என்ற நினைப்பில் அவன் மனம் கிளர்க் தெழுந்தது வியப்பிற்குரியதல்லவே!


⁠அசோகர் வரும் நேரத்தை எதிர்பார்த்து அவன் ஆவலோடு காத்திருந்தான். அவன் கொண்டு வந்த மான் அன்று சிறப்பான கறியாகச் சமைக்கப்பட்டிருந்தது.


⁠மாலை உணவுக்குத்தான் அசோகர் வருவதாக இருந்தார். எனவே அந்திப் பொழுது நெருங்க நெருங்க அரண்மனையில் எல்லோரும் சுறுசுறுப்பாகவும் பரபரப்பாக வும் வேலைகளைக் கவனிக்கலானார்கள். கோட்டை வாயிலிலேயே, மன்னர் மாமன்னரை எதிர் கொண்டு வரவழைக்க ஆயத்தம் செய்யப்பட்டது.


⁠கதிர் மறைய இன்னும் ஒரு காழிகைப் பொழுது இருந்தது.

⁠வீரமுரசம் அதிர்ந்தது.


⁠தொடர்ந்து கணகணவென்ற மணியோசை எழுந்தது.

⁠புத்தம் சரணம் கச்சாமி !

⁠தருமம் சரணம் கச்சாமி !

⁠சங்கம் சரணம் கச்சாமி !


⁠பிட்சுக்கள் சூழ அசோக மாமன்னர் அரண்மனை வாயிலினுள் நுழைந்தார். காசி மன்னர் அவரை வணங்கி வரவேற்றார். தம் பரிவாரங்கள் சூழ மாமன்னரையும் உடன் வந்த துறவிகளையும் அரண்மனையினுள் அழைத்து வந்தார்.


⁠மழுங்க வழித்த தலையும் காவியுடையுமாகக் காட்சி யளித்த நூறு பிட்சுக்களின் நடுவிலே, ஒளிமணி முடியும் கனிந்த அருட்பார்வையும், கம்பீரம் சற்றும் குறையாத திருமுகமும் படைத்த மாமன்னர் அசோகர் நடந்து வந்த காட்சி, நூறு நிலவுகளின் இடையே ஒரு பகலவன் தோன்றி ஒளி வீசிக்கொண்டு நகர்ந்து வருவது போன்றிருந்தது.


⁠ஒரு மாமன்னரை வரவேற்க ஒரு சிற்றசரர் முறையாக என்னென்ன ஏற்பாடுகள் செய்யவேண்டுமோ அத்தனை ஏற்பாடுகளும் குறைவறச் செய்திருந்தார் காசி மன்னர். வேலையாட்கள் தங்கள் கடமைகளை நிறைவேற்ற, சுழன்று சுழன்று ஓடி ஒடிப் பணிபுரிந்தனர்.


⁠வரவேற்பு மண்டபத்திலே எல்லோரும் உட்கார்ந்திருந்தார்கள். காசி மன்னரோடு அரசியல் பற்றிச் சிறிது நேரம் அசோகர் உரையாடிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென்று அவர் பார்வை இளவரசன் ஈசுவரநாதன் மீது பதிந்தது.


⁠"தங்கன் மைந்தன்தானே?" என்று அசோகர் கேட்டதற்கு ஒரு புன்னகையைப் பதிலாக அளித்துப் பேசாமலிருந்தார் காசி மன்னர்.


⁠"ஈசுவரநாதா, உன் வீர சாகசத்தைப் பற்றிக் கேள்விப் பட்டேன். சிங்கத்தை வெல்லும் ஒரு சிங்கத்தைத் தன் மகனாகப் பெற்ற காசி மன்னர் பெரும் பாக்கியசாலிதான்!” என்று மாமன்னர் கூறினர்.


⁠ஈசுவரகாதனின் உள்ளம் முழுவதும் இந்தப் பாராட்டுரையால் மகிழ்ச்சி வெள்ளம் நிறைந்து வழிந்தது. அவனி முழுவதும் வளைத்தாளும் ஒரு மாமன்னர்-உலகம் போற்றும் ஒரு பெரிய சீல நாயகர் தன்னை நேரில் நின்று போற்றிப் புகழ்ந்து பேசுகிறார் என்னும்போது எந்த இளைஞன் உள்ளம்தான் எக்களிப்படையாமல் இருக்கும்!


⁠புத்த சங்கம் அமைக்கவந்த அசோகர் தன் வீரச் செயலை எவ்வாறு அறிந்தார்! அரண்மனையில் இருப்பவர்க்கே சற்று முன் தான் அச்செய்தி தெரிந்தது. அது நிகழ்ந்து இரண்டு நாழிகைப் பொழுதுகூட ஆகியிருக்காது. அதற்குள் அசோகருக்கு எப்படித் தெரிந்தது என்று அவனுக்கு வியப்பாக இருந்தது.


⁠விருந்து ஆயத்தமாகிவிட்டதாகப் பணிப்பெண்கள் வந்து கூறினர். உடனே காசி மன்னர் யாவரையும் விருந்து மண்டபத்திற்கு அழைத்துச் சென்றார்.


⁠விருந்துண்ணும்போது அசோகரின் அருகில் காசி மன்னரும் ஈசுவரகாசனும் அமர்ந்திருந்தார்கள். அவர்களுக்கு இருபுறத்திலும் வரிசையாகப் புத்த பிட்சுக்கள் அமர்ந்திருந்தார்கள்.


⁠விருந்து மிகச் சிறப்பாகவே தயாராகி யிருந்தது. அரண்மனைச் சமையற்காரர்கள் மிகுந்த கவனத்தோடும் திறமையோடும் உணவுவகைகளைப் பாகம் பண்ணியிருந்தார்கள். ஆனால், அந்த விருந்து ஈசுவரநாதனுக்கு ஏமாற்றமளித்துவிட்டது. அவன் வேட்டையாடிக் கொண்டுவந்த மான் கறி அன்று விருந்தில் பரிமாறப்படவில்லை.


புத்த பெருமான் உயிர்களிடத்தில் அன்பு வேண்டும் என்றுதான் சொல்லியிருந்தார். புத்த சங்கத்தில் சேர்ந்தவர்கள் கொல்லாமை நோன்பைக் கட்டாயமாகக் கடைப் பிடிக்கவேண்டும் என்பது விதியாகத்தான் நெடுநாள் இருந்துவந்தது.


⁠இடையிலே யாரோ கதை கட்டி விட்டிருந்தார்கள்.


⁠புத்த பெருமான ஒரு பேதை போய்க் கண்டானாம். அவனுக்குப் புத்த பெருமான் உயிர்களைக் கொல்லக் கூடாது என்று போதனை புரிந்தாராம். அந்தப் பேதை உணவுக்காகக் கொல்லக் கூடாதா என்று கேட்டானாம். உணவுக்காகவும் கொல்லக் கூடாது என்று அழுத்தக் திருத்தமாகப் பதிலளித்தாராம் பெருமான். மேலும் ஒரு சந்தேகம் என்று கேட்டானம் பேதை. என்ன? என்று கேட்டிருக்கிறார் புத்த பெருமான்.


⁠"தானாகச் செத்துப்போன உயிர்களின் உடலைத் தின்னலாமா?' என்று அவன் கேட்டானாம்.


⁠"அதை வேண்டுமானல் தின்னலாம், கொல்லுவது பாபம். செத்துக் கிடப்பதைத் தின்பது பாவமில்லை" என்று புத்த பெருமான் கூறினராம்.


⁠இந்தக் கதையைக் கட்டிவிட்டவர்களின் நோக்கம் நிறைவேறிற்று.


⁠கொல்லுவது பாவம்; புலால் தின்னுவது பாவமில்லை என்ற போலிக் கொள்கை புத்த பெருமானின் விளக்கம் என்ற பெயரிலே நாடெங்கும் பரவிவிட்டது. நாளா வட்டத்தில் செத்ததைத் தின்னலாம் என்ற கொள்கை போய்த் தான் கொல்லாத எதையும் தின்னலாம் என்ற கருத்து எங்கும் பரவிவிட்டது. கொல்லுவதற்கென்றும் கொன்ற பாபத்தை ஏற்றுக் கொள்ளுவதற்கென்றும் ஒரு வகுப்பினர் தோன்றினர்கள். அவர்கள் பாவத்தைப் பற்றி அக்கறை கொள்ளாமல், தங்கள் போக போக்கியங்களேயே பெரும் பாக்கியமாகக் கருதிப் புலால் கடைகளைத் திறந்தார்கள். மற்றவர்கள் தின்னுவது பாவமில்லை என்ற கொள்கையில் தாராளமாகப் புலால் தின்னத் தொடங்கினார்கள்.


⁠இந்தக் கொள்கைகள் புத்த சங்கத்தினரிடையேயும் பரவிவிட்டன. புத்த பிட்சுக்களே புலால் தின்னுவது பாவமில்லே என்ற கருத்தை ஏற்று நடக்கத்தொடங்கி விட்டார்கள். எல்லோரும் புத்த பெருமானின் கருத்துக்கு மாறுபாடில்லாமல் தாங்கள் நடப்பதாகக் கருதிக்கொண்டார்கள்.


⁠அசோகர் புத்த சங்கத்தில் ஈடுபாடு கொண்ட பின்னர்தான் புத்த பெருமானின் உண்மையான தத்துவங்கள் மீண்டும் நடைமுறைக்கு வந்தன. புத்த சங்கத்தினர் உயிர்களைக் கொல்லவும் கூடாது; புலால் உண்ணவும் கூடாது என்ற கண்டிப்பான விதி ஏற்பட்டது. அசோகர் தம் வாழ்வில் இந்த ஏற்பாட்டை உண்மையோடு அனுசரித்து வந்தார். மேலும் அவர் கலிங்கப் போரில் மனமாறுதலடைந்தபின் புத்த தருமக் கொள்கையில் கருத்துான்றி அவற்றைத் தம் வாழ்வில் அனுசரித்து வந்தார். புத்த தருமங்களை வாழ்வில் கைக்கொள்ளக் கொள்ள, அவருக்கு ஒரு விதமான மனச்சாந்தியும் இன்பமும் ஏற்பட்டு வந்தன.


⁠அசோகர் புலால் உண்பதில்லை என்பதை அவருடைய ஆட்களின் மூலம் அறிந்துகொண்ட காசி மன்னர், தம் பரிசாரகர்களுக்குச் சொல்லி-புலாலுணவு வகைகளை அடியோடு நிறுத்திவிடச் செய்தார். விருந்தில் புலாலைப் படைத்து அசோகரின் மனம் புண்படாமல் செய்துவிட்டோம் என்ற மன அமைதியுடன் அவர் இருந்தார்.


⁠சிங்கத்தைத் தான் எதிர்த்து நின்று போராடியதை வலிய வந்து பாராட்டிய மாமன்னர், மான் கறியின் சுவையையும் பாராட்டிப் பேசுவார் என்று ஈசுவரகாதனின் உள்ளம் எதிர்பார்த்தது. ஆனால் மான் கறியே படைக்கப் பெறவில்லை என்பதை அறிந்தபோது அந்த இள உள்ளம் ஏமாற்ற மடைந்தது. பின்னால் காரணத்தை அறிந்த போது, ஈசுவரநாதன் புத்த சங்கத்தைப் பற்றியே அலட்சிய எண்ணம் கொள்ளத் தொடங்கிவிட்டான். உண்ணும் உணவிலெல்லாம் பாகுபாடுகள் செய்வது மூட நம்பிக்கைகளின் வகையைச் சார்ந்தது என்று அவன் கருதலானான்.


⁠ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொன்றில் விருப்பிருக்கும்; ஒவ்வொன்றில் வெறுப்பிருக்கும். உணவு, மரக்கறி என்றும் புலால் என்றும் இருவகைப் பட்டது. இதில் மனம் விரும்பியதை அவனவன் உண்ண வேண்டுமே யொழிய இன்னதுதான் உண்ண வேண்டும் என்று சட்டம் வகுப்பது தகாது என்று அவன் கருதினான்.


⁠மக்களை நல்வழிப்படுத்துவதற்கென்று சமயங்களை வகுக்கின்ற பெரியார்கள் இப்படிச் சில மூட நம்பிக்கைகளையும் புகுத்திவிடுகிறர்களே என்று அவன் எண்ணினான். அசோகர் போன்ற பேராற்றல் வாய்ந்த மாமன்னர்கள் இது போன்ற கொள்கைகளைக் கண்ணை மூடிக்கொண்டு பின்பற்றுகிறார்களே என்று அவன் சலித்துக் கொண்டான். வாய்ப்புக் கிடைத்தால் மாமன்னருடன் பேசி அவருடைய இந்தக் குருட்டுக் கொள்கையை நீக்க வேண்டும் என்றும் உறுதிகொண்டான். முன் பின் பழக்கமில்லாத நிலையில், அப்போதே தான் மாமன்னருடன் வாதிடுவது சரியல்ல என்ற நினைப்பில் அவன் அன்று எதுவும் பேசவில்லை.


⁠விருந்து முடிந்தவுடன், மான்னர் காசியரசருடன் அரசியல் பற்றிச் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்து விட்டுப் புறப்பட்டார்.


⁠நெடுநாட் கழித்து ஈசுவரநாதனுக்கு ஒரு வாய்ப்புக் கிடைத்தது. அசோக மாமன்னருடன் கூட இருந்து பழகும் ஓர் அரிய வாய்ப்பு- அவனுடைய இலட்சிய நாயகரை அணுகிப்பழகும் கிடைத்தற்கரிய சிறந்த வாய்ப்பு, அவன் எதிர்பாராமலே கிடைத்தது.


⁠அசோகர் புனித மன மாற்றம் அடைந்த பிறகு புத்த சங்கத்தில் சேர்ந்து, அன்பும் அறநெறியும் பரவப் பாடுபட்டார். உண்மையும் ஒழுக்கமும் ஒவ்வொரு மனிதன் வாழ்விலும் அரசியலிலும் கூட நிலைக்கவேண்டுமென்று பெரு முற்சியுடன் தளராது உழைத்தார். அதற்காக, புத்த சங்கக் கொள்கைகளிலே தம் மனத்தை ஈடுபடுத்தியதற்காக, அரசியல் வேலைகளில் கவனம் செலுத்தாமல் இருந்துவிடவில்லை.


⁠அசோகருடைய பெரும் பேரரசு, அவருடைய காலத்தில் சிதறாமல் குலையாமல் கட்டிக் காக்கப்பெற்று வந்தது. இதற்கு அவர் இரத்தவெறி மிகுந்த போர்முறையையோ, அநாகரிகமான நேர்மையற்ற இராஜ தந்திர முறைகளையோ கையாளவில்லை. ஒவ்வொரு செயலிலும் அவர் உண்மையையும் அன்பையும் கருவிகளாகக் கொண்டு அறவழியை நிலைநாட்டுவதில் வெற்றி கண்டார். ⁠ஈசுவரநாதனின் மனப்போக்கையும் அவன் கொண்டிருந்த சுதந்திர எண்ணங்களையும் ஒற்றர்கள் மூலம் அசோகர் தெள்ளத் தெளிவாக அறிந்து வைத்திருந்தார். ஈசுவரநாதன் அதே எண்ணங்களுடன் மேலும் பெரியவனாக வளர்ந்து வந்தால், தன் பேரரசுக்கு எவ்வளவு சீர் குலைவு ஏற்படும் என்பதையும் அவர் கணக்கிட்டு வைத்திருந்தார். போரென்று எழுந்தால், ஈசுவரகாதன் பொடியாகிப் போவான் அசோகரின் மாபெரும் படைக்கு முன்னுல் என்பது உண்மைதான். ஆனால் போர் புரி தில்லை என்று உறுதி கொண்டிருந்த அசோகரை எதிர்த்து அந்த இளைஞன் கலகம் செய்தால் அது எத்தகைய தீய விளைவுகளை உண்டாக்கும்!


⁠காசி இளவரசன் கலகம் செய்தான்; அசோகருடைய ஆட்சி கலகலத்துவிட்டது என்ற நிலை ஏற்பட்டால், மற்ற சிற்றரசர்களுக்கும், இதுவே எடுத்துக்காட்டாகி விடும். தாங்களும் காசி இளவரசனைப் பின்பற்றிச் சுதந்திரம் பெற ஆரம்பித்துவிடுவார்கள்.


⁠இந்தச் சூழ்நிலை தன் பேரரசில் உருவாகாமல் தடுக்க வேண்டும் என்று அசோகர் முடிவு செய்திருந்தார். அதற்கு காசி இளவரசனுடைய மனம் மாறியாக வேண்டும். அந்த மாற்றம் அவன் உள்ளத்திலே தன்னை யறியாமலே நிகழ்ந்தாக வேண்டும். மாறுகிறோம் என்று அவன் சிறிதும் எண்ணிப் பாராத நிலையிலே மன மாற்றம் உண்டாக வேண்டும்.


⁠இப்படித்தான் அசோகர் தம் இராஜ தந்திரத்தை நிறைவேற்ற எண்ணினார். ஈசுவரகாதன் சுதந்திர வெறி மட்டுமே கொண்டிருந்தவனாக இருந்திருந்தால், அசோக ருக்கு இந்த வேலை எளிதாக இருந்திருக்காது. அவன் அசோகரைத் தன் இலட்சிய நாயகராகவும் கொண்டிருந்ததால் அது மிகவும் எளிதாக நிறைவேற வசதியாயிற்று.


 

13 views0 comments

Comments


bottom of page