பாவலர் நாரா. நாச்சியப்பன்
அந்த நிகழ்ச்சி இப்படித்தான் கடந்தது
ஒரு நாள் காசி மன்னருக்கு மாமன்னரிடமிருந்து ஒரு திருமுகம் வந்தது. தம் அமைச்சர்களில் ஒருவர் முதுமையுற்று ஓய்வு பெற்றுவிட்டபடியால், அந்த வேலைகளை அசோகரே மேற்கொள்ள வேண்டியிருந்தது. வேறு ஒருவரை அந்தப் பதவியில் அமர்த்தும்வரையில் மாமன்னர் தாமே அதைக் கவனிக்க வேண்டியிருந்தது. தமக்குத் துணையாக இளவரசன் ஈகவரநாதனைச் சில நாட்கள் அனுப்பி வைத்தால் நலமாக இருக்கும் என்று மாமன்னர் தம் கைப்பட எழுதியிருந்தார்.
காசி மன்னர் மறுத்துரைக்க எண்ணவேயில்லே. மகனே அழைத்துப் 'புறப்படு’ என்று கட்டளையிட்டுவிட்டார். அசோகர் வேலைக்கு என்று அழைத்திருக்தால் ஈசுவர நாதனின் சுதந்திர உள்ளம் அதை உதறித் தள்ளி யிருக்கும். தமக்குத் துணையாக ஒத்தாசை இருக்கவே அழைக்கிறார் என்ற நினைப்பில் அவன் பெருந்தன்மையோடு தன் தந்தையின் கட்டளைக்குக் கீழ்ப்படித்தான். மறு நாளே பாடலிபுத்திரத்திற்குப் போய்ச் சேர்ந்தான்.
அசோகர் அவனை அன்பும் ஆர்வமும் பொங்கித் ததும்ப வரவேற்றார். அவன் நலத்தையும் அவன் தாய் தந்தையர் நலத்தையும் அக்கறையோடு விசாரித்தார். தன் அழைப்புக்கு இணங்கி உடனே புறப்பட்டு வந்தமைக்காகத் தன் பாராட்டுதல்களைக் கூறினர். பின் அவனிடம் பார்க்க வேண்டிய வேலைகளை ஒப்படைத்தார். ஈசுவர நாதனிடம் ஒப்படைத்த வேலை, சிற்றரசர்களின் நிலையைக் கண்காணிப்பதாகும். அசோகர் தம் பேரரசு சீர் குலையாமல் காப்பற்ற - சிற்றரசர்களைக் கண்காணிப்பதற்காக ஒரு தனித் துறையே உண்டாக்கி, அதற்கு முதிர்ந்த அனுபவம் வாய்ந்த ஓர் அமைச்சரையே நியமித்திருந்தார். அந்தப் பேரறிஞரின் வேலையைத் தான் ஈசுவரகாதன் தொடர்ந்து பார்க்க வேண்டியிருந்தது. நாள் தோறும் மாமன்னர் தாமே முன்வந்து அரை நாழிகைப் பொழுது அவ்வேலையில் ஈடுபடுவார்.
ஈசுவராாதன் வேலையை ஒப்புக்கொண்டு கருத்தூன்றிப் பார்க்கத் தொடங்கினான். அசோகரின் அரசாட்சி முறையையும், இராஜதந்திர வழிகளையும் தானும் கற்றுத் தெரிந்துகொள்ள வேண்டுமென்ற ஆர்வத்தோடுதான் ஈசுவராாதன் அந்த வேலையில் அமர்ந்தான். ஆனால் போகப் போக அவனுக்கு அசோகரிடம் இருந்த மதிப்பு அதிகரித்தது. அவர் மீது அன்பும் தோன்றி வளர்ந்தது.
பொதுவாகத் தலைவர்களாக விளங்குவோரிடம் தூரத்திலிருந்து பழகுவதே சிறப்பு. அவர்களைப் பற்றி நாம் கொண்டிருக்கும் உய்ர்ந்த மதிப்பும் கருத்தும் நெருங்கிப் பழகப் பழகக் குறைந்துவிடும். சில தலைவர்களிடம் நெருங்கிப் பழகப் பழக, ஏன் இந்த மனிதரிடம் பழகினோம் என்ற வெறுப்பும் ஏற்பட்டு விடும். பெரும்பாலான தலைவர்கள் நிலை இப்படித்தான். ஆனால் அசோகர் நிலை இப்படிப் பட்டதல்ல, நெருங்கிப் பழகப் பழக, அவர் மீது நமக்கு அன்பே உண்டாகும். அவருடைய கொள்கைளில் ஆழ்ந்த பற்றே உண்டாகும். அதற்குக் காரணம், அவருடைய உண்மையான செயலும், உயர்ந்த ஒழுக்கமும் சிறந்த மனப் பண்புமேயாகும். சுதந்திர உணர்ச்சியும் மகோன்னதமான இலட்சிய வேட்கையும் கொண்ட ஈசுவரனாதன், தன் இலட்சிய நாயகரான அசோகரிடம் நெருங்கிப் பழகப் பழக அவருடன் ஓர் அன்புறவால் பிணிப்புண்டான் என்றால் அது வியப்புக் குரியதல்ல. அன்புணர்ச்சி வளருமானால் பகையுணர்ச்சி கருகி மடியத்தானே செய்யும் ஈசுவரகாதன் பாடலிபுத்திரம் வந்தபிறகு தானே அசோகராய்-அசோகரே தானாய் ஆன ஒரு நிலையை எய்திவிட்டான். அவருடைய கொள்கைகளும் கோட்பாடுகளும் மாசுமருவற்ற அவனுடைய இளம் உள்ளத்திலே வேரூன்றி விட்டன. புத்த தருமம் அவனுடைய வாழ்வின் இலட்சியமாகி விட்டது. அரசியலிலேயும் புத்த தருமமே நிலைபெற வேண்டுமென்ற கருத்து அவனுக்கு உடன்பாடாயிற்று.
ஒரு முறை பெரும் சிக்கலான ஒரு பிரச்சினை ஏற்பட்டது. சிற்றரசன் ஒருவன் அசோக மாமன்னருடன் போர் தொடுப்பதாக அறிவித்து ஒலை அனுப்பியிருந்தான். ஒற்றர்களின் குறிப்பும் அவன் போர் ஆயத்தங்கள் செய்து வரும் உண்மையைப் புலப்படுத்தின.
அந்தச் சிற்றரசன் எண்ணம் இதுதான். அசோகர் போர் செய்யவில்லை என்ற உறுதி பூண்டிருக்கிறார். தான் போருக்குப் புறப்பட்டால், போரைத் தவிர்ப்பதற்காக விட்டுக்கொடுத்து விடலாம். தான் எளிதாக சுதந்திர அரசு பெற்றுவிடலாம். பிறகு அசோகரின் பேரரசுக்கு நடுவிலேயே தன் வலிமையால் ஒரு குட்டிப் பேரரசு கூட நிறுவிவிடலாம்.
சிற்றரசனின் இந்த மனப்போக்கைப் பொறுப்பில் இருந்த ஈசுவரநாதன் நன்கு தெரிந்துகொண்டான். ஆனால், அவனுடன் ஏற்படக் கூடிய போரை எப்படித் தவிர்ப்பது? அவனுடைய முயற்சிகளைப் பின்னடையச் செய்வது எப்படி? இதற்கு எப்படிப்பட்ட இராஜ தந்திரத்தைக் கையாளுவது?
சிந்தித்துச் சிந்தித்துப் பார்த்தான். அவனுக்கு ஒரு வழியும் புலப்படவில்லை. இந்தச் செயல் தன் அனுபவத்திற்கும் அறிவுக்கும் அப்பாற்பட்டதாகப் புலப்பட்டது.
எப்படிச் செயலாற்ற வேண்டும் என்று அசோகரிடமே கேட்டு விடுவதென்று புறப்பட்டான்.
அசோகர் அங்கே இல்லை. தோட்டத்தில் இருப்பதாகக் கூறினார்கள். தோட்டத்திற்குச் சென்றான்.
அங்கே அவன் கண்ட காட்சி அவனை மெய்மறந்து நிற்கச் செய்தது. மாமன்னர் அசோகர் தோட்டத்தின் நடுவே பசும்புல் தரையில் சாதாரணமாக உட்கார்ந்திருந்தார். அவருடைய மடியிலே ஒரு மான் கன்று படுத்து அசை போட்டுக் கொண்டிருந்தது. அவரைச் சுற்றிலும் மான் கன்றுகள் அச்சமற்றுப் புல் மேய்ந்து கொண்டு நின்றன. புறாக் கூட்டம் ஒன்று அவரைச் சுற்றி இரைந்து கிடந்த தானிய மணிகளைப் பொறுக்கித் தின்று கொண்டிருந்தது. அவர் தோளிலும் மடியில் கிடந்த மான் கன்றின் முதுகிலும் இரண்டொரு புறாக்கள் குந்துவதும் பறப்பதுமாக இருந்தன. தாங்கள் அந்த மனிதருக்குச் சற்றேனும் அஞ்ச வேண்டுவதில்லை என்ற எண்ணத்துடன் அவை அவரை நெருங்கிப் பழகுவதாகத் தோன்றியது. மனிதரைக் கண்டால் அஞ்சி அரண்டோடுகின்ற மிருகங்களையும் பாய்ந்து கொல்ல முனையும் கொடு விலங்குகளையுமே கண்டிருந்த ஈசுவர நாதனுக்கு இங்கே சற்றும் அச்சமின்றி அன்பு கொண்டு பழகுகின்ற உயிரினங்களைக் கண்டபோது வியப்பாக இருந்தது, அந்த உயிர்களுக்கும் மனிதர்களுக்கிருப்பதைப் போலவே அன்புணர்வும் உறவு மனப்பான்மையும் இருக்கின்றன என்பதை அவன் நேரில் கண்டு கொண்டான்.
தான் வந்தது எதற்கென்று அவனுக்கு நினைவு வரச் சிறிது நேரம் பிடித்தது. அது நினைவு வந்தவுடன் அவன் தடதடவென்று கடந்து அசோகரை நெருங்கினான். அவன் நெருங்கிச் செல்லும்போது புறாக்கள் படபடவென்று இறக்கைகளை அடித்துக் கொண்டு மேலெழும்பின. மான் கன்றுகள் துள்ளிப் பாய்ந்து ஓடின. அவன் அசோகரின் எதிரில் போய் கின்றவுடன் அவை மீண்டும் அங்கே வந்து சூழ்ந்து கொண்டன. தன்னையும் அவை தம் அன்புலகில் ஏற்றுக் கொண்டு விட்டன போலும் என்று மனத்திற்குள் எண்ணிக் கொண்டான் ஈசுவரநாதன்.
அசோகர் அவனே நோக்கி நிமிர்ந்தார். தான் வந்த காரணத்தைச் சில சொற்களில் அவன் விளக்கிக் கூறினான்.
"உடனடியாகக் கவனிக்க வேண்டியதுதான்" என்று கூறிக் கொண்டே அசோகர் எழுந்திருந்தார். ஆனால், அவர் இச் செய்தியைக் கேட்டுப் பரபரபபோ கலவரமோ அடைந்ததாகத் தெரியவில்லை.
அலுவல்மனைக்கு வந்தவுடன், சிற்றரசனின் ஒலையை வாங்கிப் பார்த்தார் அசோகர். உடனடியாகத் தன்னை வந்து சந்திக்கும்படி அவனுக்கு ஒரு கடிதம் அனுப்புமாறு ஈசுவரகாதனிடம் கூறினர். தூதர் மூலம் கடிதம் அனுப்பப்பட்டது. ஆனால் ஆணவமும் அசட்டுத் தைரியமும் தொண்ட அந்தச் சிற்றரசன் அசோகரை வந்து காண மறுத்து விட்டான். மறுநாளே அச்செய்தி கிடைத்து விட்டது.
"ஈசுவரநாதா, நாளை நான் அந்தச் சிற்றரசனைச் சந்திக்கப் போகிறேன். நீயும் வருகிறாயா!" என்று கேட்டார் அசோகர்.
'வருகிறேன்!" என்றான் ஈசுவரநாதன்.
இருவரும் தங்கள் அரச உடைகளைக் களைந்து மூட்டை கட்டிக் கொண்டார்கள். ஆட்டிடையர்களைப் போல வேடம் கொண்டு, சிற்றரசனின் கோட்டைக்குள்ளே நுழைந்தார்கள். பால்காரர் போல் நடித்து அரண்மனை அந்தப்புரத்தை அடைந்து விட்டார்கள். அங்கே ஒரு மறைவான இடத்திலே நின்று தங்கள் அரச உடைகளை அணிந்து கொண்டார்கள்.
பகையரசனின் அரண்மனை. அரச உடையில் மாமன்னர். பின்னால் இளவரசன். அசோகர் சற்றும் கலங்கவில்லை. அவர் உடன் செல்லும் தைரியத்தோடு ஈசுவரகாதன் இருந்தான்.
கம்பீரமாக நடந்து சென்றார் அசோகர். சிற்றரசன் மந்திராலோசனை மண்டபத்தை அடைந்தார். திடீரென்று மாமன்னரை நேரில் கண்ட அதிர்ச்சி காவலர்களைப் பிரமிக்க வைத்தது. வாளை உயர்த்தி வணக்கம் கூறினர். "அசோகர் வந்திருக்கிறார் என்று உங்கள் அரசனிடம் போய்ச் சொல்" என்று கூறினர் அசோகர். ஒரு காவலன் ஒடினான். அசோகர் ஈசுவரநாதன் பின் தொடர நடந்தார்.
அந்தச் சிற்றரசன் ஓடோடி வந்து வணங்கி வரவேற்றான், இருவருக்கும் உயர்ந்த இருக்கை தந்து தான் கீழே நின்றான். அவனுடைய அமைச்சர்களும் எழுந்து வணங்கி நின்றனர்.
அசோகரிடமோ, ஈசுவரநாதனிடமோ அப்போது வாளில்லை. வேறு எவ்விதமான ஆயுதமுமில்லை. ஆனல் அந்தச் சிற்றரசன் ஏன் அப்படிப் பணிய வேண்டும்? வணங்க வேண்டும்?
சின்னஞ்சிறு பிள்ளை கூட இதன் காரணத்தைக் கூறி விட முடியும் வஞ்சகமாக, அசோகரிடம் அந்தச் சிற்றரசன் நடந்து கொண்டிருந்தால் அந்தச் செய்தி வெளிப்பட்டவுடன் அவனுக்கு என்ன கதி நேரிட்டிருக்கும் என்று எண்ணிப் பார்க்கக் கூட முடியாது. மக்களிடையே அசோகருக்கு அவ்வளவு மதிப்பிருந்தது; அவ்வளவு அன்போடு மக்கள் அசோகரை நேசித்தார்கள். இதை அந்தச் சிற்றரசன் அறியாதவனல்ல. ஆகவே, அவன் எதிர்பாராத விதமாக - ஆயுதமற்றுத் தன் முன்னிலையில் திடுமென வந்து நின்ற அசோகரைக் கண்டவுடன் வியப்பும் திகைப்பும் அடைந்து வணங்கி நின்றது ஆச்சரியத்திற்குரியதல்ல.
ஆனால், ஒரு பகைவன் கோட்டையில் துணிந்து நுழைந்து கையில் எவ்விதமான படைக்கலனுமின்றி நெஞ்சுறுதி ஒன்றே துணையாக அவன்முன் நிற்கின்ற தன்மை அசோகரை யன்றி வேறு யாருக்கு வரும்? ஈசுவரநாதன் அசோகரின் நெஞ்சுறுதியைக் கண்டு பிரமித்தவாறே அவர் பின் நின்றான்.
வணங்கி நின்ற சிற்றரசனை நோக்கி அசோகர் சில கேள்விகள் கேட்டார். அவன் படையெடுத்துக் கலகம் செய்து சுகந்திரம் பெற முயன்ற செய்தி உண்மை யென்பதை அவன் வாய் மூலமாகவே அறிந்து கொண்டார். பின் அவர் பேசத் தொடங்கினார்.
முதலில் அவர் அவனுடைய சுதந்திர உணர்ச்சியையும் வேட்கையையும் பாராட்டினர். அவன் சுதந்திரத்தைப் பறிக்க வேண்டுமென்பது தன் குறிக்கோளல்ல என்பதை விளக்கிக் கூறினர். நாட்டு நிலைமையைப் படம் பிடித்துக் காட்டினர், சுதந்திரமாக அவன் தனியரசு ஏற்படுத்திய பின் பிற அரசர்களும் பேரரசை எதிர்த்துக் கிளர்ந்தெழக் கூடும் என்ற உண்மையை ஒளிவு மறைவின்றி அவனுக்கு எடுத்துரைத்தார். தனியரசுகள் பலப்பல ஏற்பட்டபின், அவற்றுள்ளே வலிமை மிக்க ஒன்று மற்றவற்றை அடக்கியாள முற்படும் என்ற பின் விளைவை விளக்கினர். அப்போது மீண்டும் அந்தச் சிற்றரசன் வேறு வழியின்றி ஒரு பேரரசுக்கு ஆட்பட நேரிடும் என்பதையும் எடுத்துரைத்தார். எதிர்த்துப் போரிடாத அசோகரிடமிருந்து விடுதலை பெற்று, மீண்டும் கொடுமையான போருக்கு உயிர்ப்பலி கொடுத்து அடிமைத் தனத்தை விலைக்கு வாங்க நேரிடும் என்பதை அவர் அந்தச் சிற்றரசனுடைய மனத்தில் பதியும்படி எடுத்துக் கூறினர். இத்தனை மாறுபாடுகளுக்கும் இடையிலேயே நாடெங்கிலும் ஏற்படக் கூடிய குழப்பம், கொள்ளை, கலகம், உயிர்க்கொலை, கட்டம், அழிவு எத்தனை, எவ்வளவு என்பதெல்லாம் எடுத்துரைத்தார்.
கடைசியாக, அவன் தன் அழைப்பை மதித்து வர மறுத்ததைக் கண்டித்து விட்டு, தன் ஆட்சியில் அவன் சுதந்திரத்திற்கோ, சுதந்திர உணர்ச்சிக்கோ பாதகமாக தான் கடந்து கொண்டிருக்கிறாரா என்று கேட்டார். முன்னோர்கள் போரிட்டுச் சேர்த்த பேரரசைக் கட்டிக் காத்துவருவதைத் தவிர அசோகர் எந்த அரசரையும இழிவாக நடத்தியதில்லை. எல்லோரையும் சிறப்பாகவே நடத்தி வந்தார். குடிமக்கள் எவ்வாறு அசோகரைப் போற்றி மதித்து வந்தார்களோ அவ்வாறே சிற்றரசர் அனைவரும் அவரைப் போற்றி மதித்து வந்தார்கள். அவர்கள் அசோகரின் பேரரசுக்கு ஆட்பட்டிருந்தார்கள் என்பதைத் தவிர வேறு எவ்விதமான குறைபாடுகளும் அடையவில்லை.
அசோகருடைய பேச்சு அந்தச் சிற்றரசனுடைய மனத்தைத் தொட்டது. தான் சுதந்திர அரசு நிறுவிய பின் தன் சிற்றரசுக்கு நேரிடக்கூடிய கதியைத் தன்னைக் காட்டிலும் அசோகர் தெளிவாக அறிந்திருக்கிறார் என்பதை அவன் உணர்ந்தான்.
அன்பு வழியில் ஒரு பேரரசை நிலை நாட்ட அசோகர் கொண்டிருக்கும் உண்மையான வேட்கையை அவன் மனம் ஆதரித்தது.
போர் வெறிக்கும் கொலை வெறிக்கும் ஊடே தத்தித் தடுமாறிக் கொண்டு நின்று தத்தளிக்கும் சுதந்திரத்தைக் காட்டிலும், போரரற்ற அமைதி விரும்பிய ஒரு பேரரசை, போட்டி, பொறாமையற்ற ஓர் அன்பு வழிப் பேரரசை, ஆதிக்க வெறியற்ற ஒரு நல்லரசை நிலை நிறுத்தத் தானும் உதவியாக இருப்பது பெருமைக் குரியதே என்பதை அவன் ஏற்றுக் கொண்டாள். தன் போர் ஆயத்தங்களை உடனடியாகக் கைவிடுவதாக அசோகருக்கு உறுதியளித்தான். அந்தச் சிற்றரசனுக்கு மனமாற்றம் ஏற்பட்ட பொழுதிலேயே ஈசுவரனாதனுக்கும் மனமாற்றம் ஏற்பட்டு விட்டது.
அசோக மாமன்னரின் பேரரசை நிலை நிறுத்துவதற்குத் தானும் தொடர்ந்துழைக்க வேண்டுமென்று அவன் தன் மனத்திற்குள்ளேயே முடிவு செய்துகொண்டான்.
கோட்டையிலிருந்து அசோகர் வெளியேறிய போது அவர் அடிநிழலை மட்டுமன்றி அவர் வழி முழுவதையும் பின்பற்றும் ஒரு மனநிலை பெற்று ஈசுவரநாதன் அவரைப் பின்தொடர்ந்து நடந்தான்.
முற்றும்
Comments