ஏற்காடு இளங்கோ
149. தனித்துவமாக இருக்க வேண்டும் என்பதே
இளைஞர்களின் குறிக்கோளாக இருக்க வேண்டும்.
•••••
150. எதிர்பாராத பிரச்சினைகளை எதிர்கொண்டு அதில் வெற்றி
பெறுவது இளைஞர்களின் தனித்தன்மையாகும்.
•••••
151. எங்கள் இந்தியா
நிகழ்ச்சி ஒன்றின்போது அப்துல் கலாம் குத்து விளக்கினை ஏற்றி வைத்தார்.
குத்து விளக்கு ஏற்றும் முன்பு அவர் கூறியது.
குத்துவிளக்கு இந்துக்களின் அடையாளம்
அதற்கு ஒளிதரும் மெழுகுவர்த்தி கிறிஸ்தவர்களின் அடையாளம்
அதை ஏற்றும் நான் ஒரு இஸ்லாமியன்
இதுதான் எங்கள் இந்தியா.
•••••
152. பயில்வது படைப்பாற்றலை வளர்க்கும்.
படைப்பாற்றல் எண்ணத்தை உருவாக்கும்.
எண்ணம் அறிவை ஊட்டும்.
அறிவு உங்களைச் சிறப்புறச் செய்யும்.
•••••
153. தனி மனிதர்களைவிட
நாடே முக்கியம்
என்ற சிந்தனையை
மனதில் வைத்துக்கொண்டு
நீங்கள் அனைவரும் வளரவேண்டும்.
•••••
154. கோட்பாடுகளை இறக்குமதி செய்வதையும்
பிறர் கருத்துகளை, சிந்தனைகளை
இங்குக் கொண்டுவந்து வளர்ப்பதை விடுத்து,
நமது சொந்தத் தீர்வுகளைத்தான் நாம்
உருவாக்கிக் கொண்டாட வேண்டும்.
•••••
155. நாம் அனைவருமே நமக்குள்ளேயே
ஏதோ ஒரு அதி அற்புத அறிவாற்றல்
வைத்துக்கொண்டிருக்கிறோம்
•••••
156. என் எண்ணத்தில் கல்விமுறை
மாணவர்களின் ஆக்கப்பூர்வமான
கற்பனைத் திறன்களை
ஊக்குவிப்பதாக அமைய வேண்டும்.
•••••
157. போற்றத்தக்க நற்பண்புகளையும்
போதிப்பதாக நம் கல்விமுறை அமையவேண்டும்.
•••••
158. மாணவர்கள் அமைதியின்
தூதுவர்களாக அரும் பங்காற்றலாம்.
•••••
159. அன்பு ஒன்றே இடையறாது
தொடரும் ஆனந்தம்; மானுடத்தின்
இலட்சிய நோக்கும் அதுவே.
•••••
160. நான் பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும்
விடுக்கும் வேண்டுகோள் இதுதான்.
மாணவர்களது மலர்ந்த நெஞ்சங்களில்
உங்கள் மனச்சலிப்புகளைக் கொட்டி
அசுத்தப்படுத்தி விடாதீர்கள்.
•••••
161. பிரகாசமான எதிர்காலம் குறித்த
ஒரு செய்தியை
இளைஞர்களுக்குத் தெரிவியுங்கள்!
தைரியம் சொல்லுங்கள்!
அது அவர்களுக்கு மட்டுமல்ல
இந்த நாட்டுக்கே செய்கின்ற
மகத்தான சேவை ஆகும்.
•••••
162. இந்த உலகத்தில் பிறந்த அனைவருக்கும்
வரலாற்றின் பக்கங்களில்
ஒரு பக்கம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால்
அந்த பக்கத்தை இந்த உலகமே படிக்க
வைப்பது உங்கள் கைகளில்தான் உள்ளது.
•••••
163. இந்த உலகம் இரவும் பகலும்
கடுமையாக உழைத்துக்கொண்டு இருக்கிறது.
ஏனென்று தெரியுமா, உங்களையும்
மற்றவர்களைப்போல் ஆக்குவதற்காக.
•••••
164. பூமிக்குக்கீழே, பூமியிலே, பூமிக்கு மேலே உள்ள
எந்த ஒரு சக்தியைக்காட்டிலும்
மனஎழுச்சி கொண்ட
இளைஞர்கள்தான் மிகப்பெரிய சக்தி.
•••••
165. எனக்கு வேண்டும் என்ற சுயநில என்ணம்தான்
லஞ்சம் வாங்கத் தூண்டுகிறது. அந்த
எண்ணத்தை மாற்றி நாம் ஒவ்வொருவரும்
நம்முடைய மனத்தை, வீட்டை,
குடும்பத்தை தூய்மையானதாக
மாற்றுவோமேயானால், நாடு மாறும்.
•••••
166. தனிப்பட்ட ஒருவரது புத்திக் கூர்மையின்
அடிப்படையில் உருவாவதல்ல தொழில்நுட்பம்.
பலரது அறிவாற்றலின் சங்கமத்தில் பிறப்பது இது.
•••••
167. ஒரு மனுஷன் பிரியும்போது
அவன் தாய் அழுதா அவன் ஒரு நல்ல மகன்
அவன் பிள்ளைக அழுதா அவன் ஒரு நல்ல தகப்பன்
அவன் பிரிவுக்காக ஒரு நாடே அழுதா…
அவன் ஒரு நல்ல தலைவன்!
•••••
169. பிறந்த நாள்
பிறந்த நாள் என்றால் என்ன? என்கிற இந்த ஒரு கேள்வியை பிபிசி வேர்ல்ட் நிறுவனத்தார் உலகில் உள்ள மிகப் பெரிய மனிதர்கள் (VIP) எல்லோரிடமும் கேட்டனர். அதில் மிகச் சிறந்த பதிலாக தேர்வு செய்யப்பட்டது அப்துல் கலாமின் பதில்.
“வாழ்க்கையில் அந்த ஒரே ஒரு நாள் உன்னுடைய
அழுகைக்குரல் கேட்டு உன் தாய் சிரிப்பது…
•••••
170. உங்களுக்குள்ளே அடி ஆழத்தில்
புதைந்து கிடக்கும் எண்ணங்களை,
ஆசைகளை, நம்பிக்கைகளை நீங்கள்
ஆராய்ந்து பார்க்க ஏதுவாக அந்த
அறிவாற்றல் தூண்டிவிடப்படும்.
•••••
171. முழுமையான ஈடுபாட்டுணர்வோடு
செயல்படும்போது ஒரு
பரவசப் பெருக்கை உணர்கிறேன்.
•••••
172. மாணவர்கள்
அப்துல் கலாம் மாணவர்களை மிகவும் நேசித்தார். மாணவர்களை சந்திப்பதற்காக நாடு முழுவதும் பயணம் செய்தார். அவர்களின் கேள்விகளுக்கு பதிலளிப்பதோடு அவர்களை உற்சாகப்படுத்தியும் வந்தார். மாணவர்களுக்கு அறிவுரையும், ஆலோசனைகளையும் வழங்கினார் அவை பொன்மொழிகளாகக் கருதப்படுகிறது.
தோல்வியைக் கண்டு
பயப்படாதீர்கள்.
தோல்வியென்ற சொல்லையே
தோற்கடியுங்கள்.
•••••
173. மாணவர்கள் உயர்ந்த நிலையை அடைய மூன்று
காரியங்களைச் செய்ய வேண்டும். அவை
1. இலட்சியத்தில் உறுதி வேண்டும்.
2. நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த உழைக்க வேண்டும்.
3. தோல்வியைக் கண்டு பயப்பட வேண்டும்.
தோல்வியைத் துரத்தி அடிக்க வேண்டும்.
•••••
174. மாணவர்கள் தங்கள் பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டுமென்றால் பிரச்சினைகளை எதிர்த்து கடுமையாகப் போராட வேண்டும். பிரச்சினைகள் உங்களைத் தோற்கடித்து விடக்கூடாது. நீங்கள்தான் பிரச்சினைகளைத் தோற்கடிக்க வேண்டும்.
•••••
175. மாணவர்கள் தங்கள் மனதில் தேடுதல்
வேட்கையையும், வேள்வித் தீயையும் வளர்த்துக் கொள்ள வேண்டுமென்றால் எப்போதும் உயர்வான என்ணங்களையே எண்ணவேண்டும்.
•••••
176. உங்களுக்கு இறக்கைகள் உள்ளன.
தவழ முயற்சிக்காதீர்கள்,
பறக்க கற்றுக் கொள்ளுங்கள்,
உச்சத்திற்கு பறந்து செல்லுங்கள்.
•••••
177. கஷ்டம் வரும்போது
கண்ணை மூடாதே
அது உன்னை கொன்றுவிடும்
கண்ணை திறந்து பார்.
நீ அதை வென்று விடலாம்.
•••••
178. வாழ்க்கை என்பது
ஒரு சந்தர்ப்பம் – நழுவ விடாதீர்கள்
ஒரு கடமை – நிறைவேற்றுங்கள்
ஒரு லட்சியம் – சாதியுங்கள்
ஒரு சோகம் – தாங்கிக் கொள்ளுங்கள்
ஒரு போராட்டம் – வென்றுவிடுங்கள்
ஒரு பயணம் - நடத்தி முடியுங்கள்.
•••••
179. நீ நட்சத்திரமாக ஜொலிக்க விரும்பினால்
நீ யார் என்பது முக்கியமல்ல,
உனது மனது எதை விரும்புகிறதோ
அது நிச்சயம் உன்னை வந்து சேரும்.
•••••
180. நீ யாராக இருந்தாலும் பரவாயில்லை,
நீ எண்ணுவது விண்மீனாக இருந்தாலும்
உன் உழைப்பால் நீ எண்ணியது உன்னை வந்து சேரும்
நீ நீயாக இரு.
•••••
181.மாணவர்களுக்கான பத்து உறுதிமொழிகள்
மாணவர்களிடையே உரையாற்றும்போது மாணவர்கள் எப்படிப்பட்ட லட்சியம் கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்பதை அப்துல் கலாம் வலியுறுத்தி வந்தார். 10 உறுதி மொழிகளை பின்பற்றுமாறு கேட்டுக்கொண்டார். மாணவர்களுக்கான 10 உறுதி மொழிகள் இதோ…
1. நான், எனது வாழ்க்கையில் நல்லதொரு லட்சியத்தை
மேற்கொள்வேன். நன்றாக உழைத்துப் படித்து என் வாழ்க்கையிலே மேற்கொண்ட லட்சியத்தை அடைய முற்படுவேன்.
2. நான், எனது விடுமுறை நாட்களில், எழுதப்படிக்கத் தெரியாத ஐந்து பேருக்காவது எழுதப்படிக்க கற்றுத்தருவேன்.
3. என் வீட்டிலோ அல்லது பள்ளியிலோ குறைந்த பட்சம் ஐந்து செடிகளையாவது நட்டு அதை பாதுகாத்து வளர்த்தும் மரமாக்குவேன்.
4. நான், எனது வீட்டை தூய்மையாக வைத்துக்கொள்வேன். எனது சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்வேன். எனது முதுகுளத்தூரை தூய்மையாக வைத்துக்கொள்வேன். எனது இந்த செயலால் என் தமிழ்நாடு தூய்மையாகும். இந்தியா தூய்மையாகும். மக்களின் மனமும் சுத்தமாகும், வாழ்வு சிறக்கும்.
5. மது, சூதாடுதல் மற்றும் போதைப்பழக்கங்களுக்கு ஆளாகித் துயருறும் ஐந்து பேரையாவது அதிலிருந்து மீட்டு நல்வழிப்படுத்த நான் முயல்வேன்.
6. நான், ஜாதியின் பெயராலோ, மதத்தின் பெயராலோ மொழியின் பெயராலோ எந்தவித பாகுபாடும் பாராட்டாது எல்லோரிடமும் சமமாக நடந்துகொள்வேன்.
7. நான், வாழ்க்கையில் நேர்மையாக நடந்துகொண்டு மற்றவர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்க முயல்வேன்.
8. நான், என் தாய் மற்றும் தாய்நாடு இரண்டையும் நேசித்து, பெண்குலத்திற்கு உரிய மரியாதையையும், கண்ணியத்தையும் அளிப்பேன்.
9. நான், நாட்டில் அறிவு தீபத்தை ஏற்றி அணையா தீபமாகச் சுடர்விடச் செய்வேன்
10. நமது தேசியக் கொடியை என் நெஞ்சத்தில் ஏந்தி நாம் நாட்டிற்கு பெருமை சேர்ப்பேன்.
•••••
182. சுய கட்டுப்பாடு
சாதிக்க வேண்டும் என்ற வேட்கை கொண்டுள்ள மாணவர்களுக்கு பல நல்ல ஆலோசனை வழங்கி வந்தார். ஆலோசனைகளைத் தனது வாழ்க்கையிலிருந்தே கீழ்வருமாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
மனதையும் எண்ணங்களையும்
கட்டுப்படுத்தி, என் தலைவிதியை எனக்குச்
சாதகமானதாக அமைத்துக்கொள்ள நான்
கடுமையாக முயற்சி செய்தேன்.
ஒவ்வொரு மாணவருக்குமே
வெற்றிபெற வேண்டும் என்ற ஆசை
இருக்கத்தான் செய்கிறது. ஆனால்
அதை நிஜமாக்கிக் காட்டுவதில் தான்
ஒவ்வொருமே வேறுபடுகிறோம். சுயக்
கட்டுப்பாட்டு நெறியைப் பின்பற்றிச்
செயல்பட்டால், ஒவ்வொருவராலும் சாதிக்கமுடியும்
•••••
183. மற்றவர்கள் என்னை உதாரணமாக
எடுத்துக் கொள்ளவேண்டும் என்று
நான் விரும்பவில்லை, ஒருசில
ஆத்மாக்களாவது எனது வாழ்க்கைக்
கதையைத் தெரிந்துகொள்வதன் மூலம்
உத்வேகம் பெறக்கூடும் என்று நம்புகிறேன்.
•••••
184. மறைவு
அப்துல் கலாம் மேகாலயா தலைநகர் ஷில்லாங்கில் உள்ள ஐ.ஐ.எம்.கல்வி நிறுவனத்தில் 2015 ஆம் ஆண்டு ஜூலை 27 அன்று நடைபெற்ற மாணவர் சந்திப்பு நிகழ்ச்சியின்போது மாரடைப்பால் உயிரிழந்தார். அவரின் இழப்பு தாங்காமல் நாடே கண்ணீரில் மூழ்கியது. அவருக்காக நாடு முழுவதும் அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழ்நாட்டின் அனைத்து கிராமங்களிலும் அப்துல் கலாமின் மறைவிற்காக கண்ணீர் அஞ்சலி என போஸ்டர்கள் மற்றும் துண்டு பிரசுரங்கள் அச்சடித்து அவரின் மேற்கோளே இடம் பெற்றிருந்தன.
நமது பிறப்பு ஒரு
சம்பவமாக இருக்கலாம்.
ஆனால்
இறப்பு ஒரு சரித்திரமாக
இருக்க வேண்டும்.
ஆம். அப்துல் கலாம் ஒரு சரித்திரமாக வாழ்ந்து மறைந்தார். அவருடைய சாதனைகள் இந்திய நாட்டின் சரித்திரத்தில் நிலையான இடத்தைப் பிடித்துவிட்டது.
•••••
Reference
இணையதளம்.
இந்தியா 2020- அப்துல் கலாம் யு.சு.ராஜன்.
டாக்டர் அப்துல் கலாமின் வெற்றி மொழிகள் – நெல்லை சு.முத்து
தினந்தந்தி (05.09.2015)
ஏ.காதர் முஹைதீன் (ஹூமாயூன்) CSI கணினி நிறுவனம், முதுகுளத்தூர்.
தினமணி வலை பூங்கா, தி இந்து, தினமலர் நாளிதழ்கள்.
ஜனாதிபதி அப்துல் கலாம் – கவிஞர் கானதாசன்.
•••••
ஏற்காடு இளங்கோ
https://ta.wikipedia.org/s/3pgz
ஏற்காடு இளங்கோ (பிறப்பு: மார்ச் 19, 1961) ஓர் எழுத்தாளர். அறிவியல் சார்ந்த பல்வேறு புத்தகங்களை எழுதியுள்ளார்.
வாழ்க்கைக் குறிப்பு
தமிழ்நாடு, நாமக்கல் மாவட்டம் பேளுக்குறிச்சி என்னும் ஊரில் எளிய குடும்பத்தில் பிறந்தார். தொடக்கக் கல்வியை பேளுக்குறிச்சியிலும் அறிவியல் இளையர் பட்டவகுப்பை நாமக்கல்லிலும், முதுகலைப் படிப்பை அண்ணாமலைப் பல்கலையிலும் முடித்தார். இவருக்கு ஜார்ஜ் டிமிட்ரோவ், ஹோசிமின் என இரு மகன்கள் உள்ளனர்.
பணியும் நூல்களும்
நடுவணரசு தாவர மதிப்பீட்டு ஆய்வு அலுவலகத்தில் பணி புரியும் இவர் அறுபத்தைந்து அறிவியல் நூல்கள் எழுதி இருக்கிறார். அவை மூட நம்பிக்கைகளைத் தகர்க்கும் அறிவியல் செய்திகள் நிரம்பியவை.
'பழங்கள்' என்னும் புத்தகம் 'அனைவருக்கும் கல்வி' என்ற அமைப்பின் சார்பாக 38000 பள்ளிகளுக்கு வழங்கப்பட்டது .
’செவ்வாய் கிரகமும் செவ்வாய் தோஷமும்’ என்ற நூலும் ’அனைவருக்கும் கல்வி’ என்ற அமைப்பின் சார்பாக 38000 பள்ளிகளுக்கும் நூலகங்களுக்கும் வழங்கப்பட்டன.
'விண்வெளி ஆயிரம்' 'நீரில் நடக்கலாம்' போன்ற நூல்களையும் கலிலியோ, ஐசக் நியூட்டன், லூயி பாஸ்டர், ஐன்ஸ்டீன், ஸ்டீபன் ஹாக்கிங் போன்ற அறிவியல் அறிஞர்கள் பற்றியும் எழுதியுள்ளார்.
சிறிய அளவிலும் பெரிய அளவிலும் 73 புத்தகங்கள் இதுவரை வெளிவந்துள்ளன. இவருடைய மனிதன் குரங்கிலிருந்துதான் பிறந்தானா நூல் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் 11-ஆவது மாவட்ட மாநாட்டில் வெளியிடப்பட்டது[1]
பிற பொதுப் பணிகள்
1987 ஆம் ஆண்டு முதல் அறிவியல் இயக்கத்தில் முனைப்பானவராக உள்ளார். தற்பொழுது சேலம் மாவட்டத் தலைவராக உள்ளார்.
மாணவர்களுக்கான மாத இதழ் 'துளிர்' ஆசிரியர் குழுவில் உறுப்பினராக இருக்கிறார்.
பொதுவிடத்தில் எச்சில் துப்புதல் சுகாதாரக் கேடு என்பதை அறிவியல் அடிப்படையில் விளக்கி மூன்று லட்சம் துண்டறிக்கைகள் விநியோகம் செய்து பரப்புரை இயக்கம் நடத்தினார்.
மைதாவினால் செய்யப்படும் பரோட்டா சாப்பிடுவதால் உடல் நலம் கெடும் என்பதை விளக்கி வருகிறார்.
பிளாஸ்டிக் தண்ணீர்ப் புட்டிகளை ஒரு வாரத்திற்கு மேல்பயன்படுத்தல் கூடாது என்று பரப்புரை செய்தார்.
ஏற்காட்டில் உள்ள பெரிய ஏரியில் மண்டிக் கிடந்த ஆகாயத் தாமரைகளை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் அறிவொளி இயக்கம் சார்பாக நீக்கி ஏரியைத் துப்புரவு செய்தார்.
மந்திரவாதிகள், போலிச் சாமியார்கள் செய்யும் ஏமாற்று வித்தைகளையும் கடவுள் பெயரைச் சொல்லி பரப்பும் மூடச்செயல்களையும் 'பொய்' என்று அறிவியல் அடிப்படையில் நிரூபித்து வரும் தம் மனைவிக்குத் துணை நிற்கிறார்.
மாணவர்களைப் பள்ளிகளில் சந்தித்து வானவியல் பற்றிய அறிவியல் உண்மைகளைச் சொல்லி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.
ஏற்காட்டில் வாழ்ந்து வரும் இவர் மார்க்சியக் கொள்கைவழி அறிவியல் முறையில் நாத்திகராக விளங்கி வருகிறார்.
தம் இறப்பிற்குப் பிறகு தம் உடலை மருத்துவ ஆய்வுக்குப் பயன்படுத்தவேண்டும் என்று தம் விருப்ப ஆவணத்தில் பதிவு செய்துள்ளார்.
பொதுவகத்தில் தாவரவியல் பெயர்களுடனும், அதற்குரிய குறிப்புகளுடனும் பதிவேற்றுகிறார். அப்பதிவேற்றங்களை இத்தொடுப்பில் காணலாம்.
ஆதாரம்
மைதா மாவின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு - தினமணி Jul 15, 2013 3:15 AM
சிறிதும் - பெரியதும். அறிவியல் வெளியீடு.
"உங்களது தேடுதல் :- ஏற்காடு இளங்கோ". நூல் உலகம். பார்த்த நாள் 12 பெப்ரவரி 2014.
நோபல் பரிசு பெற்ற பெண்மணிகள் தினமலர் புத்தகங்கள் பார்த்த நாள் பிப்ரவரி 11, 2014
ஏற்காடு இளங்கோ. "கல்விச் சிந்தனையாளர் மரியா மாண்டிசேரி". வரலாறு. பார்த்த நாள் 12 பெப்ரவரி 2014.
ஏற்காடு இளங்கோ. பெண் வானவியல் அறிஞர்கள். சீதை பதிப்பகம்.
ஸ்டீபன் ஹாக்கிங்: தன்னம்பிக்கையின் நாயகன். மங்கை வெளியீடு.
Comments